12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய ஏடி அண்ட் டி முடிவு!
12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய ஏடி அண்ட் டி முடிவு!
UPDATED : டிச 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
பொருளாதார மந்த நிலை காரணமாக, தங்களது நிறுவனத்தில் 4 சதவீதம் அளவுக்கு ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏடி அண்ட் டி தெரிவித்துள்ளது. அத்துடன் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள ஜெட் இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான பிராட் அண்ட் விட்னி 350 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தில் 38 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் உள்ள இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சுயிஸ் குரூப் நிறுவனம் 5,300 பேரை ஆட்குறைப்பு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது. உயர்நிலை அதிகாரிகளின் போனஸ் ரத்து செய்யப்படுவதன் மூலம் 2.5 மில்லியன் டாலர் அளவுக்கு பணம் மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளது
