தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொபைல் போன்களுக்கான செலவில் சந்திரயான் விண்கலம் தயாரிக்கலாம்!

மொபைல் போன்களுக்கான செலவில் சந்திரயான் விண்கலம் தயாரிக்கலாம்!

மொபைல் போன்களுக்கான செலவில் சந்திரயான் விண்கலம் தயாரிக்கலாம்!


UPDATED : டிச 05, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
இந்தியாவிலுள்ள 50 கோடி மக்கள், மொபைல் போனுக்கு மாதம் செலவிடும் பணத்தைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலம் தயாரிக்க முடியும்,” என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
கோவை பாரதியார் பல்கலையில், ‘சந்திரயான் 1’ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழா முடிவில் அவர்,  மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:
நிலவில் உள்ள தட்ப வெப்பநிலை மாற்றம், விண்கலங்களை பாதிக்கவே செய்யும். தற்போது ‘சந்திரயான் 1’ விண்கலம், மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலத்தை பயன்படுத்தி நிலாவில் ஆய்வு நடத்தப்படுகிறது. ‘சந்திரயான் 2’ விண்கலம், நிலவில் உள்ள நீர் வளம், கனிம வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வை நடத்தும்.
நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்தியுள்ளதால், இந்தியாவிலேயே செயற்கைகோளை தயாரித்து விண்வெளியில் செலுத்தி தரும்படி பல நாடுகள் கோரி வருகின்றன. இனி, வணிக ரீதியாகவும் அதிக நன்மைகளை விண்வெளி ஆய்வு மையம் பெறும்.
இந்தியாவில் 30 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அடுத்த இரு ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 50 கோடியாக உயரும். இவர்கள், மொபைல் போனுக்கு மாதம் சராசரியாக  200 ரூபாய் செலவழிப்பர். இந்த மக்கள், ஒரு மாதத்துக்கு மொபைல் போனுக்கு செலவழிக்கும் தொகையைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலங்களை உருவாக்க முடியும்.
விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டில் மீத்தேன் வாயு, மிகக்குறைந்த அளவே எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயுவை முழுமையாக பயன்படுத்த முடியுமா என்பதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us