தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் 3 சதவீத பணியாளர்களைக் குறைக்க யாகூ திட்டம்!

இந்தியாவில் 3 சதவீத பணியாளர்களைக் குறைக்க யாகூ திட்டம்!

இந்தியாவில் 3 சதவீத பணியாளர்களைக் குறைக்க யாகூ திட்டம்!


UPDATED : டிச 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் தற்போது இந்த நிறுவனத்தில் 2 ஆயிரம் பேர் வேலைபார்த்து வருகின்றனர்.


பிரபல சுரங்க நிறுவனமான ரியோ டின்டோ நிறுவனம், 14 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள 10 மில்லியன் டாலர் கடனை குறைக்கும் வகையில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உலகிலேயே மகிப் பெரிய இரும்புத் தாது சுரங்க நிறுவனமான வேலை, 1,300 பேரை ஆட்குறைப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.


அமெரிக்காவில் சிட்டி குரூப் வங்கி நிறுவனம், உலகம் முழுவதும் பணியாற்றி வரும் தனது ஊழியர்களில் 52 ஆயிரம பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. ஜப்பானில் உள்ள ரீடெய்ல் புரோக்கரேஜ் பிரிவில் பணியாற்றி வரும் 2,500 பேரை ஆட்குறைப்பு செய்யப் போவதாகவும் சிட்டி குரூப் தற்போது அறிவித்துள்ளது.


ஸ்வீடனில் உள்ள பேரிங் நிறுவனமான எஸ்.கே.எஃப்., நிறுவனம் 2,500 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது 6 சதவீதம் அளவுக்கு ஆட்குறைப்பு செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.


உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக, தொழில் நிறுவனங்களில் நிலைமையைச் சரி செய்யும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us