தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் பணிபுரியும் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் 68%: ஆய்வில் தகவல்

இந்தியாவில் பணிபுரியும் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் 68%: ஆய்வில் தகவல்

இந்தியாவில் பணிபுரியும் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் 68%: ஆய்வில் தகவல்


UPDATED : டிச 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஐ.டி.,களில் படித்த இந்திய மாணவர்கள் சங்கம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
சென்னையில் நடைபெறும் ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் மாநாட்டையொட்டி,  டெலிகான்பரசிங் மூலம் இந்த அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் டில்லியில் வெளியிட்டார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐ.ஐ.டி., பட்டதாரிகள் அளித்த பங்களிப்பு குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1955ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டு வரை படித்த ஐ.ஐ.டி., மாணவர்களில் 63 சதவீதம் பேர் இந்தியவில் பணிபுரிகின்றனர். 2001ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 30 சதவீதம் மாணவர்களே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர் என். ரமேஷ் தெரிவித்தார். கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் வெகுவேகமாக வளர்ந்து வருவதை அடுத்து பெரும்பலான ஐ.ஐ.டி., மாணவர்கள் நமது நாட்டிற்கே வந்து விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நான் 1977ல் ஐ.ஐ.டி.,யில் படித்து விட்டு 1979ல் எம்.பி.ஏ., பாஸ் செய்தேன். ரூ.,1300 ஊதியத்தில் வேலை கிடைத்தது. வெளிநாட்டில் போய் படிப்பது என்பது எனக்கு சாதகமானதாகத் தெரிந்தது. இப்போது, படிப்பை முடித்த மாணவர்களுக்கே கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, வெளிநாடுகளுக்குப் போய் பணிபுரிவது கணிசமாகக் குறைந்துள்ளது என்கிறார் ரமேஷ்.
நாட்டின் நலனுக்காக ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் தங்களது திறமைகளை வழங்கத் தயாராக உள்ளனர். இதற்காக, வெளிநாடுகளில் உள்ள நல்ல பணிகளையும் விட்டு விட்டிருக்கிறார்கள் என்கிறார் ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் அசங் தேசாய்.
1955ல் ஐ.ஐ.டி. கரக்பூரிலிருந்து முதல் கட்டமாக பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். அதிலிருந்து கணக்கிட்டுப் பார்த்தால் ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்களின் எண்ணிக்கை 1.75 லட்சம். 1976ம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் கல்வி நிறுவனங்களில் நலிவடைந்த வகுப்பைச் சேர்ந்தவர்களும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்களும் 15 சதவீதம் அளவுக்குச் சேர்ந்துள்ளனர். நடுத்தர பொருளார நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 2001ம் ஆண்டுக்குப் பிறகு 55 சதவீதம் அளவுக்கு உள்ளது. உயர் பொருளாதார வகுப்பைச் சேர்ந்த மாணவர்கதளின் எண்ணிக்கை 1976ம் ஆண்டில் 38 சதவீதமாக இருந்தது 2001ல் 20 சதவீதமாகி விட்டது என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us