குரோம்பேட்டை எம்.ஐ.டி., பொன்விழாவில் கலாம் பங்கேற்கிறார்
குரோம்பேட்டை எம்.ஐ.டி., பொன்விழாவில் கலாம் பங்கேற்கிறார்
UPDATED : டிச 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
எம்.ஐ.டி.,யின் 50வது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு தற்போதைய மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் திட்டமிட்டு வருகிறது.
எம்.ஐ.டி. பொன் விழாவுக்கு முன்னாள் மாணவரான அப்துல் கலாமை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம். அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க அப்துல் கலாம் வருகிறார். அந்த நாளில் எம்.ஐ.டி., வளாகத்தில் நடைபெறும் விழாவிலும் பங்கேற்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
குரோம்பேட்டையில் எம்.ஐ.டி., என்று அழைக்கப்படும் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலாஜி கல்வி நிலையத்தை 1949ல் தொழிலதிபர் ராஜம் துவக்கினார். பின்னர், இது அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக மாறியது. இந்தக் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் 1958ல் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தார். தற்போதையத் துணைவேந்தரான மன்னர் ஜவஹகரும் எம்.ஐ.டி.,யில் 1975ம் ஆண்டில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து அங்கு பணிபுரிந்து வந்தவர்.
