தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேம்பஸ் இன்டர்வியூ கட்டணம்: ரத்து செய்ய ஐ.ஐ.எம்.,களிடம் கெஞ்சல்

கேம்பஸ் இன்டர்வியூ கட்டணம்: ரத்து செய்ய ஐ.ஐ.எம்.,களிடம் கெஞ்சல்

கேம்பஸ் இன்டர்வியூ கட்டணம்: ரத்து செய்ய ஐ.ஐ.எம்.,களிடம் கெஞ்சல்


UPDATED : ஜன 19, 2009 12:00 AM

ADDED : ஜன 19, 2009 01:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2009 12:00 AM ADDED : ஜன 19, 2009 01:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனால், முழுமையான விலக்கு அளிப்பது சாத்தியமில்லை என்று ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன.


இந்தியாவில் பன்னாட்டு  நிறுவனங்களின் படையெடுப்பை தொடர்ந்து, உள்நாட்டு நிறுவனங்களும் பெரிதும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக நிதித்துறை, ஆலோசனை, நுகர்பொருள் நிறுவனங்கள், ஐ.ஐ.எம்., படிப்பு முடித்தவர்களை, கொத்திக் கொண்டு செல்ல வரிசை கட்டி காத்திருக்கின்றன.



இந்நிறுவனங்கள், ஐ.ஐ.எம்.,  இறுதியாண்டு நேரத்தில் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களின் முக்கிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன. இந்நிறுவனங்களுக்கு ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் இரண்டு வகைகளில் கட்டணம் வசூல் செய்கின்றன. கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்பதற்கு தனியாக கட்டணமும், பணிக்கு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக கட்டணமும், ஆள் தேர்வுக்கு வரும் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

பெங்களூரு ஐ.ஐ.எம்., நிறுவனத்தில், கேம்பஸ் இன்டர்வியூ துவங்கும் முதல் நாளன்று, அதில் பங்கேற்கும் நிறுவனங்களிடம் இருந்து அதற்காக ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்காகவும், அவரை தேர்வு செய்யும் நிறுவனத்திடம் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


இரண்டாவது நாளன்று, கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்பதற்கான கட்டணம் குறைக்கப்படுகிறது. மூன்றாவது நாளில் இருந்து இதற்கென கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால், மாணவர்கள், தகுந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டால், அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை, தேர்வு செய்யும் நிறுவனங்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,மிலும் ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நடை முறை பின்பற்றப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கேம்பஸ் இன்டர் வியூவில் பங்கேற்பதற்காக, நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.


பெங்களூரு ஐ.ஐ.எம்., நிறுவனத்துக்கு, கேம்பஸ் இன்டர்வியூ தொடர்பாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று, பல்வேறு நிறுவனங்களும் கடிதம் அனுப்பி உள்ளன. இது போர்டு மீட்டிங்கில் விவாதிக்கப்பட உள்ளது. ஆனால், கட்டணத்தை முழுமையாக எக்காரணமும் கொண்டும் விலக்கிக் கொள்ள முடியாது என்று, கேம்பஸ் இன்டர்வியூ பிளேஸ்மென்ட் பிரிவுத் துறை தலைவர் சவுரவ் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


ஆமதாபாத் ஐ.ஐ.எம்., நிறுவனங்களையும் இது தொடர்பாக சில நிறுவனங்கள் அணுகி உள்ளன. இந்தூர் ஐ.ஐ.எம்., நிறுவனத்துக்கு இது தொடர்பாக எந்தவிதமான கடிதங்களும் அனுப்பப்படாவிட்டாலும், கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் போதெல்லாம், பல்வேறு நிறுவனங்களும் இது தொடர்பாக ஐ.ஐ.எம்., நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமாக தொடர்ந்து வருகிறது.


இந்த கட்டண வசூலிப்பை கைவிட, ஐ.ஐ.எம்., தயாராக இல்லை. ஐ.ஐ.எம்., நிறுவனங்களின் வருவாயில், 5 சதவீதம் இதன் மூலமே கிடைப்பது, இதற்கு முக்கிய காரணம். சராசரியாக கேம்பஸ் இன்டர்வியூவில் ஆட்கள் தேர்வு மூலம், ஆமதாபாத் ஐ.ஐ.எம்., நிறுவனத்துக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மற்ற ஐ.ஐ.எம்., நிறுவனங்களுக்கு 50 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த கட்டணங்களுக்காக மத்திய சுங்கவரி மற்றும் தீர்வை கட்டணமாக 12.2 சதவீதத்தை ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us