தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மகளிருக்கு தொழிற் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

மகளிருக்கு தொழிற் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

மகளிருக்கு தொழிற் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஜன 19, 2009 12:00 AM

ADDED : ஜன 19, 2009 01:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2009 12:00 AM ADDED : ஜன 19, 2009 01:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை மகளிர் திட்டம் ஏற்படுத்தி தருகிறது.
 
மகளிர் திட்டம் மூலம் தற்போது பூந்தமல்லியில் உள்ள பி.எஸ்.டி.எஸ்., நிறுவனம் மூலம் ஜே.சி.பி., கிரேன், போர்க் லிப்ட் 2 மாத காலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்களுக்கான நேர்காணல் வரும் 21ம் தேதி பூந்தமல்லி பைபாஸ் சாலையில் உள்ள ஜான்சன் லிப்ட் ஆபரேட்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த 18 வயது முதல் 28 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


மகளிர் திட்டத்தில், எம்.ஆர்.எப்., நிறுவனம் மூலம் நடத்தப்பட உள்ள இலகு ரக மற்றும் கன ரக வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, 18 வயது முதல் 26 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து பயிற்சிகளுக்கும் பயிற்சிக் கட்டணம் இலவசம். பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனமே வேலை வாய்ப்பு பெற்று தர உறுதி அளித்துள்ளது.
இவ்வாய்ப்பினை இளைஞர்கள் மற்றும் மகளிர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us