UPDATED : ஏப் 13, 2016 12:00 AM
ADDED : ஏப் 13, 2016 10:29 AM
அ நிறம் | அளவு
மதுரை
: எட்டாம் வகுப்பு பொதுத்
தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டுக்கள்
வழங்கப்படுகின்றன.
மதுரை அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் கூறியுள்ளதாவது: தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை, www.tndge.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி பதிவு செய்ய வேண்டும்.
நுழைவுச் சீட்டில் தேர்வரின் பெயர், பதிவெண், தேர்வெழுதும் பாடங்கள், தேர்வு மையத்தின் பெயர் விபரங்கள் இருக்கும். அனுமதி சீட்டின்றி தேர்வெழுத அனுமதியில்லை. அனுமதி சீட்டு வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது, என கூறியுள்ளார்.
