தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய மாணவர்கள் விசா பிரிட்டனில் நிராகரிப்பு

இந்திய மாணவர்கள் விசா பிரிட்டனில் நிராகரிப்பு

இந்திய மாணவர்கள் விசா பிரிட்டனில் நிராகரிப்பு


UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM

ADDED : ஜூலை 27, 2009 12:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM ADDED : ஜூலை 27, 2009 12:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இதன் ஒரு பகுதியாக கடந்த மூன்று மாதங்களில் 49.1 சதவீதம் இந்திய மாணவர்களின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டனில், வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்படும் விசாக்களுக்கான விதிமுறைகளை, அந்நாட்டு அரசு மார்ச் மாதம் முதல் மிகவும் கடுமையாக்கி உள்ளது.


மாணவர்கள் விசாவை பயன்படுத்தி, செய்யப்படும் மோசடி மற்றும் போலி கல்வி நிறுவனங்களை தடுக்க, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும், பிரிட்டன் எல்லை கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் பதிவு செய்து லைசென்ஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டன், விசா தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கியதால், ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மாணவர்கள் விவகாரத் துறை பிரிட்டன் கவுன்சில் தெரிவித்துள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை, 49.1 சதவீதம் இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், 34.9 சதவீதம் சீன மாணவர்களின் விசாக்களும், 21.3 சதவீதம் அமெரிக்க மாணவர்களின் விசாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து பிரிட்டன் பிரதிநிதிகள் சபையின் உள்துறை விவகார குழுவின் அறிக்கையில், நாட்டில் இருக்கும் போலியான கல்லூரிகளை கண்டுபிடிக்க, புதிய நடைமுறைகள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us