UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM
ADDED : ஜூலை 27, 2009 12:55 PM
இத்திட்டத்தின் முதல் கட்டம், அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம், யு.ஜி.சி., அங்கீகாரம் மற்றும் உதவி பெற்ற 550 கல்லூரிகள், சர்வதேச சமுதாயத்தினர் வெளியிடும், புத்தகங்கள், வாழ்க்கை வரலாற்று குறிப்பு தகவல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை குறைந்த கட்டணத்தில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். உதாரணமாக, இலக்கியம், கலை போன்ற பாடப்பிரிவுகளை படிக்கும் மாணவர்கள், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்ட பத்திரிகைகளை படிக்கலாம். மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின், 18 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தை, ஆமதாபாத்தைச் சேர்ந்த தகவல் மற்றும் நூலக தொடர்பு மையம் செயல்படுத்தி, கல்லூரிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் இடையே மத்தியஸ்தராக செயல்பட உள்ளது. இது குறித்து ஜகதீஷ் ஆரோரா என்பவர் கூறுகையில், முன்னர், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு டவுண்லோடிங்கிற்கும் 750 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது இத்திட்டத்தின் மூலம், 3,500 பத்திரிகைகளுக்கு மொத்தமாக 5,000 ரூபாய் பணம் செலுத்தினால் போதும் என்றார்.
