UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM
ADDED : ஜூலை 29, 2009 12:06 PM
பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகத்தின் பதவிக் காலம் ஆகஸ்ட் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. இப்பல்கலைக் கழகத்திற்கு புது துணைவேந்தரை தேர்வு செய்ய, மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ஆளுடையபிள்ளை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் பாஸ்கரன், கோவை அரசு கலைக் கல்லூரி கணிதப் பேராசிரியர் ராஜகோபால் ஆகியோர் கொண்ட தேர்வுக்குழுவை அரசு அமைத்திருந்தது. இக்குழு, துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் வழங்கியுள்ளது. அப்பட்டியலில், தற்போதைய துணைவேந்தர் திருவாசகம், தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் சாமிநாதன், பாரதியார் பல்கலைக் கழக கணிதப் பேராசிரியர் கந்தசாமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது. இந்த மூன்று பேரில் ஒருவரை பாரதியார் பல்கலைக்கழக புது துணைவேந்தராக கவர்னர் நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
