UPDATED : ஆக 04, 2009 12:00 AM
ADDED : ஆக 04, 2009 02:57 PM
அ நிறம் | அளவு
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களில் எப்.எம்., தொடங்கப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எப்.எம்., வானொலியில் அறிவியல் நிகழ்ச்சிகளும் சாஸ்திரிய இசை உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படும்.
இத்திட்டத்திற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பொது வானொலி (என்.பி.ஆர்.,) போன்று இது செயல்படும் என்று கான்பூர் ஐ.ஐ.டி., இயக்குநர் சஞ்சய் கோவிந்த தாண்டே தெரிவித்தார்.
இந்த எப்.எம்., வானொலி நிலையம் அமைப்பதற்காக ரூ.22 லட்சம் செலவில் சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வானொலியில் அறிவியல் சம்பந்தமான தங்களது சந்தேகங்களை பேராசிரியரிடம் தொலைபேசி மூலம கேட்டு விளக்கம் பெறுவதற்கான நிகழ்ச்சியும் ஒலிபரப்பத் திட்டமிட்டுள்ளது.
