கலை, மருத்துவப் படிப்புகளிலும் காலடி எடுத்து வைக்கும் ஐ.ஐ.டி.,
கலை, மருத்துவப் படிப்புகளிலும் காலடி எடுத்து வைக்கும் ஐ.ஐ.டி.,
UPDATED : ஆக 04, 2009 12:00 AM
ADDED : ஆக 04, 2009 03:02 PM
தனியார் நிறுவனத்தின் கூட்டுறவில் கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி., வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கியதும் கரக்பூர் ஐ.ஐ.டி., சார்பில் எம்.பி.பி.எஸ்., படிப்பு தொடங்கப்படும்.
தற்போது கரக்பூர் ஐ.ஐ.டி.,யில் ஸ்கூல் ஆப் மெடிசின் அண்ட் டெக்னாலஜி துறை உள்ளது. தற்போது வளாகத்தில் மருத்துவமனையின் தேவையை உணர்ந்துள்ளோம் என்கிறார் கரக்பூர் ஐ.ஐ.டி., இயக்குநர் டி. ஆச்சார்யா தெரிவித்தார். இந்த ஐ.ஐ.டியில் உள்ள லா ஸ்கூலில் அறிவுசார் சொத்து உரிமை குறித்த படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
கௌஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டியில் இந்த கல்வியாண்டு முதல் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் பாடப்பிரிவில் முதுநிலைப் படிப்பு தொடங்கப்படுகிறது. அனைத்து ஐ.ஐ.டி.,களில் கலைப்புலத் துறைகள் உள்ளன. இன்ஜினியரிங் பாடப்பிரிவு மாணவர்கள் கலைப்புலப் பாடப்பிரிவுகளை விருப்பப் பாடபிரிவைத் தேர்வு செய்யலாம். கான்பூர் மற்றும்
கரக்பூர் ஐ.ஐ.டி.,களில் பொருளாதாரப் பாடப்பிரிவில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி போன்று முழுமையான பல்கலைக்கழகமாக ஐ.ஐ.டி.,கள் உருவாக வேண்டும் என்று மனித வள மேம்பாட்டு அமைச்கம் அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. டெலப்மெண்ட் அண்ட் கல்ச்சுரல் ஸ்டடீஸ் பாடப்பிரிவில் இரண்டு ஆண்டு எம்.ஏ., படிப்பு தொடங்குவது குறித்து தில்லி ஐ.ஐ.டி., பரிசீலனை செய்து வருகிறது.
பொருளாதாரம், ஆங்கிலம், டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., படிப்பை சென்னை ஐ.ஐ.டி., நடத்தி வருகிறது. இங்கு இந்தப் படிப்பைப் படித்து வரும் மாணவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை ஆவலுடன் மற்ற ஐ.ஐ.டி.கள் எதிர்பார்த்து வருகின்றன.
