தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., இறுதித்தேர்வு ரிசல்ட்: 10 அல்லது 12ம் தேதி வெளியீடு

பி.எட்., இறுதித்தேர்வு ரிசல்ட்: 10 அல்லது 12ம் தேதி வெளியீடு

பி.எட்., இறுதித்தேர்வு ரிசல்ட்: 10 அல்லது 12ம் தேதி வெளியீடு


UPDATED : ஆக 06, 2009 12:00 AM

ADDED : ஆக 06, 2009 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2009 12:00 AM ADDED : ஆக 06, 2009 12:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு


தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஒரு ஆண்டு படிப்பான பி.எட்.,க்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இறுதித்தேர்வு எழுதினர். தேர்வு எழுதி இரண்டு மாதங்கள் முடிந்தும், ரிசல்ட் வெளியிடாமல்  தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தி வருகிறது.


இதனால், அவர்கள், தங்களின் அடுத்தகட்ட படிப்புக்கான, பணி தேடுதலுக்கான முயற்சிகளை தள்ளிப்போடும் சூழ்நிலை ஏற்படுகிறது.


வரும் 10ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நேரடி நியமனப் பணிக்கு, விண்ணப்பிக்க முடியாமல், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியிடங்களுக்கான வாய்ப்பையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் கூறியதாவது:


வரும் 10 அல்லது 12ம் தேதிக்குள், பி.எட்., தேர்வு முடிவு வெளியிடப்படும். உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணிக்கு, தாராளமாக விண்ணப்பம் செய்யலாம்.


அவர்கள் தேர்வில் பாஸ் செய்தால், தங்களின் சான்றிதழ்களை சமர்ப்பித்துக் கொள்ளலாம்; அவை ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு பத்மநாபன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us