UPDATED : ஆக 12, 2009 12:00 AM
ADDED : ஆக 12, 2009 12:18 PM
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இந்த எப்.எம்., வானொலி ஒலிபரப்பு முறைப்படி தொடங்கி வைக்கப்படும்.
இந்த எப்.எம். வானொலி திட்டத்திற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான சோதனை ஒலிபரப்பு அடுத்த சில நாட்களில் தொடங்கப்படும். ஞானவாணி எப்.எம். வானொலி நிலையத்தை நடத்தும் மரபார்ந்த முதல் பல்கலைக்கழகம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்தான் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். கற்பக குமாரவேல் தெரிவித்தார்.
கேரியர் கவுன்சிலிங், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், கல்வித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இந்த வானொலி கவனம் செலுத்தும். தொலைநிலைக் கல்வி மூலம் பாடங்களைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வானொலி மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
