வீட்டுக்கு ஓரு நூலகம்: மாணவர்களுக்கு கலாம் வேண்டுகோள்
வீட்டுக்கு ஓரு நூலகம்: மாணவர்களுக்கு கலாம் வேண்டுகோள்
UPDATED : ஆக 12, 2009 12:00 AM
ADDED : ஆக 12, 2009 03:03 PM
அ நிறம் | அளவு
ஈரோடு புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவில் பேசிய அவர், ஒவ்வொரு வீட்டிலும் பிரார்த்தனை அறைக்கு அருகே 20 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை அமைக்க மாணவர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது புத்தகங்கள் படிக்கச் செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மாணவர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர் துணை நிற்க வேண்டும். 20 புத்தகங்களுடன் தொடங்கப்படும் நூலகம் 200 ஆகவும் 2 ஆயிரமாகவும் உயர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நல்ல தரமான புத்தகங்களைப் படிப்பதால் இளைஞர்களின் அறிவு வளரும் என்பதுடன், அதன் மூலம் இந்தியாவில் அறிவுப் புரட்சி ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.தான் படித்து தனது வாழ்க்கையை மாற்றியமைத்த மூன்று புத்தகங்களான லைட் பிரம் மெனி லேம்பஸ், திருக்குறள், எம்பயர் ஆப் தி மைன்ட் ஆகிய புத்தகங்கள் பற்றியும் கலாம் குறிப்பிட்டுப் பேசினார்.
