இன்ஜினியரிங்: தமிழ் வழி படித்த மாணவர்கள் சதவீதம் அதிகரிப்பு!
இன்ஜினியரிங்: தமிழ் வழி படித்த மாணவர்கள் சதவீதம் அதிகரிப்பு!
UPDATED : ஆக 15, 2009 12:00 AM
ADDED : ஆக 15, 2009 11:20 AM
பிளஸ்2வில் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களின் எண்ணிக்கையைவிட (57.59 சதவீதம்) தமிழ் வழி படித்தவர்களின் எண்ணிக்கை (42.41 சதவீதம்) குறைவாக உள்ளது. அதே நேரத்தில் 2007ம் ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நரத்து செய்யப்பட்டபிறகு, தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேருவது அதிகரித்துள்ளது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், பிளஸ்2வில் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களைவிட, தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. விண்ணப்பித்தவர்களில் 78 ஆயிரத்து 431 பேர் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்கள். 50 ஆயிரத்து 564 பேர் மட்டுமே தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள். இதனால் கவுன்சிலிங் மூலமாக பொறியியல் படிப்புகளில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையிலும் பிளஸ்2வில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கவுன்சிலிங் மூலம் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களில் 35 யிரத்து 434 பேர் (42.41 சதவீதம்) மட்டுமே தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள். 48 ஆயிரத்து 118 பேர் (57.59 சதவீதம்) ஆங்கிலவழிக் கல்வியில் படித்தவர்கள்.
தமிழகத்தில் பிளஸ்2வில் ஆங்கில வழிக் கல்வியில் படிப்பவர்களைவிட, தமிழ்வழிக் கல்வியில் படிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. ஆனால், பொறியியல் படிப்பில் தமிழ்வழிக் கல்வியில் படித்த பிளஸ்2 மாணவர்கள் அதிக அளவில் சேராதது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மட்டும்தான் பொறியியல் படிப்பில் சேர்ந்த தமிழ்வழிக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. அதற்குமுன் 2005 (26.34சதவீதம்), 2006(27.86 சதவீதம்), 2007 (35.63 சதவீதம்) ஆகிய ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்த தமிழ்வழிக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறது.
கடந்த 2006ம் ஆண்டு வரை பொது நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு பிளஸ்2 பொதுத் தேர்வில் Ôபெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்த வருகிறது. பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, பொறியியல் படிப்பில் பிளஸ2 தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
2007ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த தமிழ்வழிக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கை 35.63 சதவீதமாக உயர்ந்தது. கடந்த இரு ஆண்டுகளாகக, பொறியியல் படிப்பில் சேர்ந்த தமிழ்வழிக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
