தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளை தவிர்த்த மாணவர்கள்!

புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளை தவிர்த்த மாணவர்கள்!

புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளை தவிர்த்த மாணவர்கள்!


UPDATED : ஆக 15, 2009 12:00 AM

ADDED : ஆக 15, 2009 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2009 12:00 AM ADDED : ஆக 15, 2009 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு


இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது:


மொத்தமிருந்த 446 இன்ஜினியரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டு துவங்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை 92. புதிய கல்லூரிகளில் 5 கல்லூரிகள் மட்டுமே அரசு கல்லூரிகள். பிற அனைத்தும் சுயநிதி கல்லூரிகள்.
புதிய கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவோடு, சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புகளையும் கொண்டிருந்த 42 கல்லூரிகளில் மாணவர்கள் ஓரளவுக்கு சேர்ந்தார்கள்.

இந்த மூன்று பிரிவுகளிலும் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்ததால், இக்கல்லூரிகளின் சேர்க்கை விகிதம் 60 சதவீதம் இருந்தது. இம்மூன்று பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவு இல்லாத கல்லூரிகளில் சேர்க்கை விகிதம் மிகக் குறைவாக இருந்தது. அதாவது 30 சதவீதம்தான் இருந்தது.
கடந்த ஆண்டு மொத்தம் 32 இன்ஜினியரிங் பிரிவுகளே இருந்தன. இந்த ஆண்டு மொத்தம் 44 பிரிவுகள் இருந்தன.
 
கடந்த ஆண்டு இருந்த மொத்த இடங்களின் எண்ணிக்கை 84,555. இதில் 77,018 இடங்கள் நிரம்பின. 7,537 இடங்கள் காலியாக இருந்தன. நிரம்பிய இடங்களின் சதவீதம் 91 ஆக இருந்தது. இந்த ஆண்டு, மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 874 இடங்கள் இருந்தன. அதில் 78,864 இடங்கள் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது மொத்தத்தில் 71.5 சதவீதம் மட்டுமே. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை சற்று கூடியிருந்தாலும், மொத்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் இன்ஜினியரிங் இடங்களை ஒப்பிடும் போது, இன்ஜினியரிங் மோகம் சற்று குறைந்திருக்கிறது என்றே கூற முடியும்.

கவுன்சிலிங்கில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் ஆகியவற்றை சேர்த்தால் இந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 56 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.  400க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அனைத்து இடங்களையும் பூர்த்தி செய்த கல்லூரிகள் 27 மட்டுமே. அண்ணா பல்கலைக்கழகம், அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடங்கள் வேகமாக நிரம்பின.

கடந்த ஆண்டு 46 கல்லூரிகளில் அனைத்து இடங்களும் முழுவதுமாக நிரம்பின. அவற்றில் 27 கல்லூரிகள் சுயநிதி கல்லூரிகள். ஆனால் இந்த ஆண்டு 2 சுயநிதி கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. பெண்களுக்கான 23 கல்லூரிகளில் 5 கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளில் ஒரு சில இடங்களே நிரம்பியுள்ளன.

நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் புதிய சுயநிதிக் கல்லூரிகளை தேர்வு செய்வதை தவிர்த்துள்ளனர் என்பது இந்த கவுன்சிலிங்கில் தெரிய வந்துள்ளது.
குறைவான கல்லூரி கட்டணத்தை கொண்டுள்ள புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் மாணவர்களின் சேர்க்கை நன்றாக இருந்தது.
இம்முறை மாணவர்களால் அதிகம் விரும்பப்பட்ட துறை மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இதற்கடுத்த இடத்தைப் பிடித்த துறை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறை. மாணவிகள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையை அதிகம் தேர்வு செய்தனர். மாணவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையையே அதிகம் தேர்வு செய்தனர்.

2006
ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் 7,106 இடங்களே இருந்தன. இந்த ஆண்டு 15,304 இடங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளில் மட்டும் 8 ஆயிரத்து 198 இடங்கள் அதிகரித்துள்ளன.

மெக்கானிக்கல் துறையோடு சம்பந்தப்பட்ட துறையாக ஏரோநாட்டிக்கல், மெக்கட்ரானிக்ஸ், மரைன் இன்ஜினியரிங், புரடக்ஷன் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைககள் கருதப்படுகின்றன.
மெக்கானிக்கல் தொடர்பான இத்துறைகளில் 18 ஆயிரத்து 219 இடங்களில், 17, 195 இடங்கள் பூர்த்தியாகிவிட்டன.

எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட சர்க்யூட் பிரிவுகளில் இருந்த 79 ஆயிரம் இடங்களில் 51 ஆயிரத்து 393 இடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன.
இந்த ஆண்டு 349 கல்லூரிகள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை கொண்டுள்ளன. இவற்றில் 9 கல்லூரிகளைத் தவிர, மற்ற கல்லூரிகள் முழுவதுமாக இடங்களை நிரப்பிவிட்டன.

கடந்த ஆண்டு, 199 கல்லூரிகளே மெக்கானிக்கல் துறையை கொண்டிருந்தன. தற்போது அதிகரித்துள்ள இடங்களால் வெளியேறும் மாணவர்களின் எண் ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, இத்துறையில் வேலை வாய்ப்புகள் உருவாகுமா என்பது சந்தேகமே.

ஐ.டி.,துறை வீழ்ச்சி அடைந்தாதல் இந்த துறையை மாணவர்கள் தேர்வு செய்தனர். ஆனால் அந்த துறையால் இவ்வளவு மாணவர்களுக்கு நல்ல வேலை தரமுடியுமா என்பது கேள்விக்குறி. மெக்கானிக்கல் துறையில் மட்டுமே மொத்தமுள்ள 15,304 இடங்களில் 14 ஆயிரத்து 200 இடங்கள் நிரம்பியுள்ளன.

2006
ல் சிவில் இன்ஜினியரிங் துறையில் 2,667 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 6,981 இடங்கள் உள்ளன. இரண்டாண்டுகளில் 4 ஆயிரத்து 314 இடங்கள் அதிகரித்துள்ளன.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையை விட இந்த ஆண்டு, சிவில் இன்ஜினியரிங் துறைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
இம்முறை மாணவர்களால் அதிகம் விரும்பாத துறை ஐ.டி., துறைதான். 313 கல்லூரிகள் ஐ.டி., துறையை வழங்குகின்றன. இவற்றில் 172 கல்லூரிகளில் வெறும் 10 இடங்கள் கூட நிரம்பவில்லை. கடந்த ஆண்டு 89 சதவீத இடங்கள் இத்துறையில் பூர்த்தியாகின. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையும் இம்முறை கடுமையான பின்னடைவை சந்தித்திருக்கிறது.

இத்துறையை கொண்டுள்ள 408 கல்லூரிகளில் 154 கல்லூரிகளில் 10 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டு 90 சதவீத இடங்கள் இத்துறையில் நிரம்பின.

தகவல் தொழில்நுட்பத்தை தேர்வு செய்வதைவிட, பயோமெடிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளை ஏராளமான மாணவர்கள் தேர்வு செய்தனர். இம்முறை 301 மாணவிகள் ஏரோநாட்டிக்கல் மற்றும் 133 மாணவிகள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவை தேர்வு செய்துள்ளனர்.

53
கல்லூரிகளில் மாணவர்கள் கவனம் திரும்பவேயில்லை. அங்கு தலா 10 மாணவர்களே சேர்ந்துள்ளனர். நாமக்கல் மற்றும் தென்மாவட்ட கல்லூரிகளில் நிறைய காலி இடங்கள் உள்ளன. சென்னை மற்றும் கோவை மண்டல பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விறுவிறுப்பாக இருந்தது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனைத்து இடங்களும் நிரம்பிய கல்லூரிகள்
1.
ஏ.சி.,காலேஜ் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி
2.
அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சி - அரியலூர் வளாகம்
3.
அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சி - பண்ருட்டி வளாகம்
4.
அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சி - ராமநாதபுரம் வளாகம்
5.
அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சி - திருக்குவளை வளாகம்
6.
அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சி - பட்டுக்கோட்டை வளாகம்
7.
அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சி - திண்டுக்கல் வளாகம்
8.
அண்ணா பல்கலைக்கழகம் - நெல்லை - நாகர்கோவில் வளாகம்
9.
அண்ணா பல்கலைக்கழகம் - நெல்லை - தூத்துக்குடி வளாகம்
10.
சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்
11.
சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜி., டெக்.,
12.
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
13.
அரசு இன்ஜினியரிங் கல்லூரி - பர்கூர்
14.
அரசு இன்ஜினியரிங் கல்லூரி - சேலம்
15.
அரசு இன்ஜினியரிங் கல்லூரி - நெல்லை
16.
இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்.,
17.
பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்.,
18.
எஸ்.எஸ்.என்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங்
19.
தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி
20.
தியாகராஜர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்
21.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - திண்டிவனம்
22.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - விழுப்புரம்
23.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - ஆரணி
24.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - ஏ.சி.டி., வளாகம்
25.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - சி.இ.ஜி.,
26.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - எம்.ஐ.டி.,
27.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்
-
திருச்சி பி.ஐ.டி., வளாகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us