தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிகளை மூடும் போராட்டம் திடீர் வாபஸ்

தனியார் பள்ளிகளை மூடும் போராட்டம் திடீர் வாபஸ்

தனியார் பள்ளிகளை மூடும் போராட்டம் திடீர் வாபஸ்


UPDATED : அக் 07, 2009 12:00 AM

ADDED : அக் 07, 2009 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2009 12:00 AM ADDED : அக் 07, 2009 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்க பொதுச்செயலர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:


சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்தால், பல்வேறு வகைகளில் மெட்ரிக் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அத்திட்டத்தை எதிர்க்கிறோம். எனினும், மெட்ரிக் பள்ளிகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாலும், திட்டம் குறித்து முதல்வர் அளித்துள்ள பதில் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாலும், 9ம் தேதி ஒருநாள் பள்ளிகள் மூடப்படும் என்ற அறிவிப்பை கை விடுகிறோம்.

அதே

நேரத்தில், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று மாற்றியும், அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளுக்குப்பின் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படும் என்ற பழைய அரசாணையை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us