தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/16 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன்: சிதம்பரம் பெருமிதம்

16 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன்: சிதம்பரம் பெருமிதம்

16 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன்: சிதம்பரம் பெருமிதம்


UPDATED : அக் 07, 2009 12:00 AM

ADDED : அக் 07, 2009 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2009 12:00 AM ADDED : அக் 07, 2009 01:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூரில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்கி அவர் பேசியதாவது:


பிறந்த

இடம், இருப்பிடம், ஜாதி, மதம், மொழி, பதவி என அடையாளங்கள் சொல்கிறோம். அதுவே தகுதியாக மாறிவிடாது. நிரந்தர அடையாளமாக இருப்பது கல்வி தான். மண்ணில் பிறந்தவர்கள் படித்தவனா, படிக்காதவனா என்ற அடையாளம் மட்டும் தான். ஆரம்பக் கல்வியில் சேரும் 100 மாணவர்களில் ஐந்து பேர் மட்டுமே பிளஸ் 2 வரை செல்கின்றனர். அதில் நான்கு பேர் மட்டுமே பல்கலைக் கழக படிப்பிற்கு செல்கின்றனர்.


இடையில்

மாணவர்கள் கல்வியை விடுவதற்கு சமுதாயம் தான் முக்கிய காரணம். அவ்வாறு உயர்கல்வி பயில பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கல்வித்தகுதி பெற முயற்சி எடுக்க வேண்டும்.நடப்பு ஆண்டில் மார்ச் 31முடிய16 லட்சம் மாணவர்களுக்கு 27 ஆயி ரத்து 641 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.


அங்கொன்றும்

இங்கொன்றுமாக பிழை செய்யும் அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஆர்வமாக செயல்பட்டு இந்த கடன் தொகையை வழங்கியுள்ளனர்.இந்த தொகை பட்ஜெட்டை விட பெரிதாக உள்ளது. விவசாயத்திற்காக மூன்று லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயும், சுயஉதவிக் குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடியும் கடன் வழங்கியுள்ளனர். அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வங்கிகள் முதல் வரிசையில் உள்ளனர்.


தரம்

வாய்ந்த பல்கலைக்கழகங்களில் தகுதியுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் படிப்பதற்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நடப்பு ஆண்டு படிப்பு முடிந்து 6 மாதம் வரை வட்டி கிடையாது என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இன்னும் பல திட்டங்கள் வர உள்ளன. இவ்வாறு மத்திய அமைச்சர் .சிதம்பரம் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us