தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை பி.எட்., தேர்வு தேதி அறிவிப்பு

பல்கலை பி.எட்., தேர்வு தேதி அறிவிப்பு

பல்கலை பி.எட்., தேர்வு தேதி அறிவிப்பு


UPDATED : அக் 09, 2009 12:00 AM

ADDED : அக் 09, 2009 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2009 12:00 AM ADDED : அக் 09, 2009 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையில் மட்டும் தேர்வுகள் நடக்கும். 1992ம் ஆண்டுக்குப் பின் சேர்ந்த பி.எட்., - எம்.எட்., மாணவர்களுக்குரிய பாடத்திட்டம் பின்பற்றப்படும்.


பதிவுக்

கட்டணம் ரூ.7,000. எம்.எட்., மதிப்பெண் மேம்பாட்டுக்கு மட்டும் தேர்வு எழுதுபவர்களுக்கு கட்டணம் ரூ.2,000. ஒரு தாளுக்கு தேர்வு கட்டணம் ரூ.400. 1992க்கு முன் சேர்ந்தவர்கள் துணை தேர்வாணையரை சந்தித்து அதற்கிணையான பாடங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.


மதிப்பெண் மேம்பாட்டிற்காக தேர்வு எழுதும் எம்.எட்., மாணவர்கள் தேர்வு ஆணையரிடம் விலக்கு ஆணை பெற்று, அதன் நகலை தேர்வு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். 2007 நவம்பர் மாதம் சிறப்பு தேர்வு எழுதியவர்கள் மீண்டும் நவம்பர் 2009 தேர்வு எழுத அனுமதி இல்லை.

பூர்த்தி

செய்யப்பட்ட தேர்வு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி (அபராதமின்றி) 4.11.2009. ரூ.100 அபராதத்துடன் 11.11.2009. தேர்வுகள் ஆரம்பமாகும் தேதி 11.12.2009. தேர்வு விண்ணப்பங்கள் கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் அக்டோபர் 12ம் தேதியில் இருந்து வழங்கப்படும்.


தனித்தேர்வர்கள்
தேர்வு விண்ணப்பங்களை கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.15க்கான ஸ்டாம்ப் ஒட்டிய, சுயமுகவரியிட்ட உறையை இணைத்து, கூடுதல் தேர்வாணையர் முகவரிக்கு விண்ணப்பித்து பெறலாம். இத்தகவல்களை கூடுதல் தேர்வாணையர் முத்துமோகன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us