படித்ததை எழுதிப்பார்ப்பதன் மூலம் கூடுதல் மதிப்பெண் பெறலாம்!
படித்ததை எழுதிப்பார்ப்பதன் மூலம் கூடுதல் மதிப்பெண் பெறலாம்!
UPDATED : அக் 11, 2009 12:00 AM
ADDED : அக் 11, 2009 08:20 AM
போடியில் டி.வி.ஆர்., அகாடமி வழங்கிய தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்- 2009 நிகழ்ச்சி பாஸ்கரா திருமண மண்டபத்தில் நடந்தது. பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மாணவ, மாணவிகளுக்கு தேர்வை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப் பட்டன. தேசிய உறுதி மொழியுடன் நிகழ்ச்சி துவங்கியது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள்:
ஆங்கிலம்-ரவிச்சந்திரன்(அரசு மேல்நிலைப் பள்ளி, சில்லமரத்துப் பட்டி):
ஏழு பாடங்களில் நான்கு பாடங்கள் படித் தாலே கட்டுரை, சிறு வினாக்களுக்கு எளிதில் விடை எழுதலாம். புதிய வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும். எழுத்து பிழைகளை தவிர்க்க அடிக்கடி எழுதி பழகவேண்டும். செய்யுள் மனப்பாடப்பகுதியை எழுதிப்பார்க்க வேண்டும். லெட்டர் ரைட்டிங் பகுதியில் எளிதில் மார்க் எடுக்கலாம்.
கணிதம்-முருகேசன்(ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி, போடி):
கணிதத்தில் நூறு மார்க் இலக்குடன் செயல்பட வேண்டும். வடிவியல், கிராப் பகுதிகளில் எளிதில் மார்க் பெறலாம். இவற்றில் மாதிரி வரைபடம் முக்கியம். தொடுகோடு, வட்ட நாற்கரம் இவற்றிற்கு முக்கியத்துவம் தரவேண்டும். எண்ணியல் பகுதியில் கவனம் செலுத்தினால் கூடுதல் மார்க் பெறலாம்.
அறிவியல்-முருகேசன் (திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளி, போடி):
இயற்பியல், வேதியியல் கணக்குகளில் அதிக மார்க் எடுக்கலாம். கோள்கள் பற்றிய கெப்ளர் விதி அடிக்கடி கேட்கப்படுகிறது. பெரிய கேள்விக்கான பதிலில் படம் தேவைப்பட்டால் அவசியம் இருக்கவேண்டும். சமூககாடு வளர்ப்பால் கிடைக்கும் நன்மைகள் முக்கிய கேள்வி.
சமூக அறிவியல்- விஜயலட்சுமி (திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளி, போடி):
சமூக அறிவியல் பாடம் பொதுத்தேர்வுக்கு மட்டுமின்றி போட்டி தேர்வுகளுக்கும் அவசியமானது. ஒவ்வொரு பாடத் திற்கும் நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டும். வரலாறு, புவியியல், குடிமையியல் பிரிவுகள் மூன்றையும் படித்தால் தான் முழு மார்க் எடுக்க முடியும். காலக்கோடு பகுதி முக்கியம். புவியியல் மேப் பகுதியில் இந்தியாவில் விளையும் தானியம், மண் வகைகள், காணப்படும் இடங் கள் முக்கியமானவை.
பிளஸ் டூ:
ஆங்கிலம்-ராஜேஸ்வரி(அரசு மேல்நிலைப்பள்ளி, சிலமலை):
பொது கட் டுரை பகுதியில் கம்ப்யூட்டர், விஞ்ஞானம் தொடர்பானவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. லெட்டர் ரைட்டிங் பகுதியில் முழு மார்க் எளிதில் பெறலாம். முதல் மூன்று பாடங்களில் உள்ள கட்டுரை படித்தால் பாராகிராப், கேள்வி-பதில்களை எளிதில் எழுதலாம்.
கணிதம்-ராம் சுந்தர்(ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி, போடி):
முதல் நான்கு பாடப்பகுதிகளை முழுவதும் படித்தால் பத்து மார்க் கேள்வி ஏழும், ஆறு மார்க் கேள்விகள் ஆறும் எழுத முடியும். மீதமுள்ள ஆறு பாடங்களிலும் குறிப்பிட்ட பாடங் களை மட்டும் படித்தால் பத்து மார்க் வினா மூன்று, ஆறு மார்க் வினா நான்கும் எழுதலாம். கணிதத்தில் 70 மார்க் எடுக்க கஷ்டப்படும் மாணவர்கள் 6,7,9 பாடப்பகுதியில் தேர்ந்தெடுத்த வினாக்கள், பண்புகள் படித்தால் போதும்.
இயற்பியல்-மரகதமணிமாறன்(அரசு மேல்நிலைப்பள்ளி, சிலமலை): இரண்டு மற்றும் ஏழாவது பாடங்களை படித்தால் ஐந்து மார்க் வினாக்கள் 15 ல் நான்கினை எழுதி விடலாம். இரண்டு, ஒன்பது பாடங்களில் மூன்று மார்க் வினாக்கள் ஏழு எழுதி எளிதில் தேர்ச்சி பெறலாம். பத்து மார்க் கேள்விக்கான பதிலில் படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கணக்குகளில் தேவையான வாய்பாடு, அலகுகள் போடுவதன் மூலம் முழு மார்க் பெற முடியும்.
வேதியியல்-ராமசுப்பிரமணி(ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி, போடி):
பாடங்களில் உள்ள ஒரு மார்க் வினாக்களை படிக்க வேண்டும். படித்த கேள்விகள், சமன்பாடுகளை எழுதி பார்க்க வேண்டும். கரிமச்சேர்மங்கள் பாடத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். முந்தைய அரசு தேர்வு வினாக்களை சேகரித்து அதற்கான விடைகளை எழுதிப்பார்ப்பதால் கூடுதல் மதிப்பெண் பெறலாம்.
தாவரவியல்-பழனிவேல்(அரசு மேல்நிலைப் பள்ளி, தங்கம்மாள்புரம்):
நேர மேலாண்மை கடைப் பிடிக்க வேண்டும். படம் உள்ள வினாக்களில் படம் வரைந்து பாகம் அவசியம் குறிக்க வேண்டும். படத் திற்கு தனி மார்க் உண்டு. பெரிய கேள்விக்கான பதிலில் முக்கிய இடங்களில் அடிக்கோடிட்டு தனித்து காட்ட வேண்டும்.
விலங்கியல்-சையதுஅபுதாகிர் (சி.பி.யூ.மேல்நிலைப்பள்ளி, கம்பம்):
முந்தைய தேர்வு வினாத் தாள்களில் உள்ள கேள்விக்கான பதில்களை நன்கு படித்தால் 90 சதவீதம் மார்க பெறலாம். நூறு சதவீதம் பெற ஒரு மார்க் வினாக்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேர்ச்சி பெற உடற்செல்லியல் பாடத்தை மட்டும் படித்தால் போதுமானது. இவ்வாறு ஆலோசனை வழங்கினர்.
நிகழ்ச்சிகளை எம்.எஸ். தண்டபாணி தொகுத்து வழங்கினார். தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 7 மணி முதல் மாணவர்கள் மண்டபத்திற்கு வரத்துவங்கினர்.
போடி சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராஜா நடக்க முடியாத நிலையில் கம்பு ஊன்றி, சக மாணவன் துணையுடனும், அதே பள்ளியை சேர்ந்த ஊனமுற்ற மாணவன் யாதவன் ஐந்து கி.மீ., தூரம் மூன்று சக்கர சைக்கிளில் வந்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை இணைந்து வழங்கியோர்: எஸ்.ஆர். எம்., பல்கலை., பாரத்நிகேதன் பொறியியல் கல்லூரி ஆண்டிபட்டி, இளையகாட் டிரஸ்ட் போடி, ஏ.எச்.எம்.,டிரஸ்ட், பி.தர்மத்துப் பட்டி. ராம் ரூப் கார்டன் பேமிலி ரெஸ்டாரண்ட், போடி.
