தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.வி., சினிமா பார்ப்பதில்லை வத்தலக்குண்டில் மாணவர்கள் உறுதி

டி.வி., சினிமா பார்ப்பதில்லை வத்தலக்குண்டில் மாணவர்கள் உறுதி

டி.வி., சினிமா பார்ப்பதில்லை வத்தலக்குண்டில் மாணவர்கள் உறுதி


UPDATED : அக் 11, 2009 12:00 AM

ADDED : அக் 11, 2009 08:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2009 12:00 AM ADDED : அக் 11, 2009 08:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு டி.எஸ். எல்., கல்யாண மண்டபத்தில் டி.வி.ஆர். அகாடமி சார்பில் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் 2009 நிகழ்ச்சி நடந்தது. பத்தாம் வகுப்பு,பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எதிர் கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.தேசிய உறுதிமொழியுடன் நிகழ்ச்சிகள் துவங்கின.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆலோசனை:

ஆங்கிலம்-எஸ்.முருகேசன் (என்.எஸ்.வி.வி., ஆண்கள் மே.நி.ப., பட்டிவீரன் பட்டி):
ஒரு மார்க் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்துபடியுங்கள். கட்டுரை மார்க் கேள்விகளுக்கு தெளிவாக குறிப்பிட்ட அளவு பதில் தந்தால் போதும். தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் தாருங்கள்.

கணிதம்-எம். சரஸ்வதி(மகாலட்சுமி பெண்கள் மே.நி.ப.,வத்தலக்குண்டு):
சூத்திரங்களை தனியாக எழுதி வைத்து தினமும் படிக்க வேண்டும்.ஒரு மார்க் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து படிக்க வேண்டும்.அனைத்து கேள்விகளுக்கும் பதில் தருவது அவசியம்.

அறிவியல்-எஸ்.புவனேஸ்வரி (மகாலட்சுமி பெண்கள் மே.நி.ப., வத்தலக்குண்டு):
பண்புகள், பயன்கள், வேறுபாடுகள், தயாரித்தல் போன்ற தலைப்பில் 5 மார்க் கேள்விகள் அதிகம் வரும். நேர மேலாண்மை முக்கியம். புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு பதில் தந்து பயிற்சி பெறுங்கள்.

சமூக அறிவியல்- ஜே.மேரி செல்வா(எஸ். என்.யூ.பி.ஆர்., பெண்கள் மே.நி.ப.,நிலக்கோட்டை):
டல்ஹெளசி அல்லது வெல்லெஸ்லி கால இந்தியா வரைபடமும், காலக் கோட்டில் காந்தியடிகளின் காலமும் அடிக்கடி கேட்கப்படுகிறது. போக்குவரத்தில் சென்னை-புதுடில்லி, மும்பை-கொல்கத்தா, வான்வழியில் திருவனந்தபுரம்- புதுடில்லி, பெங்களுரூ -கொல்கத்தா பாதை கேட்க வாய்ப் புள்ளது.இவ்வாறு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு தரப்பட்ட ஆலோசனை:

ஆங்கிலம்-எம். முருகேசன் (என்.எஸ்.வி.வி., ஆண்கள் மே.நி.ப., பட்டிவீரன்பட்டி):
கட்டுரைகளை துணை தலைப்புகள் மேற்கோள்களுடன் எழுத வேண்டும்.சிறு விடைகளுக்கு புத்தக விளக்கக் குறிப்புகளை எழுதி பழக வேண்டும். ஒரு மார்க் கேள்விகளுக்கு வினா வங்கியை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்.

கணிதம்-எ.ஜமிமா(மகாலட்சுமி பெண்கள் மே.நி. ப., வத்தலக்குண்டு):
ஒரு மார்க்கில் 30 கேள்விகள் புத்தகங்களிலிருந்தும்,10 கேள்விகள் பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட் டுள்ள புத்தகத்தில் இருந்தும் கேட்க வாய்ப்புள்ளது. விதிகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். படம் வரையும் வினாக்களுக்கு படம் இருந்தால் தான் முழு மார்க் கிடைக்கும். வினாக்களை தேர்வு செய்யும் விதம் அவசியம்.

இயற்பியல்-பி. அமுதா(எச்.என்.பி.யூ.ஆர். பெண் கள் மே.நி.ப., நிலக்கோட் டை):
புளுபிரிண்டை தெரிந்திருப்பதும் தொடர் பயிற்சியும் அவசியம். 5 ஆண்டுகளாக தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளை தனியாக எடுத்து எழுதி பயிற்சி பெறுங்கள். கணக்குகளுடன் விடை தரும் கேள்விகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்.

வேதியியல்-எஸ்.சத்யராணி(என்.எஸ்.வி.வி., ஆண்கள் மே.நி.ப., பட்டிவீரன்பட்டி):
ஒரு மார்க் கேள்விகள் 14,15,22 பாடங்களில் பொதுவாக கேட்பதில்லை. 5 மார்க் கேள்விகள் 1,4,5,6,9, 10, 17, 22 பாடங்களில் அதிகமாக கேட்கப்படுகிறது. கணக்குகளுடன் கூடிய கேள்விகளுக்கு சிறப்பு பயிற்சி செய்யுங்கள். மின்வேதியியல் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

தாவரவியல்/விலங்கியல்-ஆர்.ஜெயக்குமார்(என்.எஸ்.வி.வி., ஆண்கள் மே.நி.ப.,பட்டிவீரன்பட்டி):
மாதிரி தேர்வுகள் பல தனியாக எழுதி பயிற்சி பெறுங்கள். ஒரு மார்க் கேள்விகளுக்கு முதலில் பதில் தாருங்கள். குறைந்த நேரத்தில் அதிக மார்க் பெற முடியும் என்ற கேள்விகளை தேர்வு செய்து பதில் எழுதுங்கள். இவ்வாறு அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

எஸ்.அரியநாயகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வத்தலக்குண்டு, கொடைரோடு, நிலக்கோட்டை, பட்டிவீரன் பட்டி, கொடைக்கானல் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு முடியும் வரை டி.வி.,பார்ப்பதில்லை. சினிமா தியேட்டர்களுக்கு செல்வதில்லை என ஒரு சேர உறுதி கூறினர்.

நிகழ்ச்சியை இணைந்து வழங்கியோர்: எஸ்.ஆர். எம்., பல்கலை., சென் னை, வத்தலக்குண்டு ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீராம் ஐ.டி.ஐ., அப்பல்லோ எஜூகேசன் சென்டர், ஜெயசீலன் மெ மோரியல் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, அன்னை டிரஸ்ட், பட்டிவீரன்பட்டி ரூரல் டெவலப்மென்ட் மிஷன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us