வேலைவாய்ப்பு முகாம் 31 ஆயிரம் பேர் முன்பதிவு: அமைச்சர் தகவல்
வேலைவாய்ப்பு முகாம் 31 ஆயிரம் பேர் முன்பதிவு: அமைச்சர் தகவல்
UPDATED : அக் 11, 2009 12:00 AM
ADDED : அக் 11, 2009 08:29 AM
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக முதல்வரின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத் தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இம்மாதம் நடக்கிறது.
முகாமில் 200க்கும் மேற் பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான பணியாளர் களை தேர்வு செய்கிறது. இதில் 18 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்பதற்கான முன்பதிவு கடந்த 9ம் தேதி துவங்கி நாளை 12ம் தேதி வரை நடக்கிறது.இதில் குறிஞ்சிப்பாடியில் 5,845, காட்டுமன்னார் கோவிலில் 2,170, நெய்வேலியில் 2,395, கடலூரில் 2,102, பண்ருட்டியில் 1,631, விருத்தாசலத்தில் 1,294, குமராட்சியில் 1,055, சிதம்பரத்தில் 1,570, பரங்கிப் பேட்டையில் 2,080, கிள்ளையில் 1,830, புவனகிரியில் 2,080, கீரப்பாளையத்தில் 1,250, நல்லூரில் 1,860, திட்டக்குடியில் 1,079, அண்ணாகிராமத்தில் 2,491, கம்மாபுரத்தில் 1,400, நெல்லிக்குப்பத்தில் 930 பேர் என மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்து 982 பேர் பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு வரும் 19ம் தேதி வடலூர், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், காடாம்புலியூர், மங்களூரில் கழுதூர், சிதம்பரம், கடலூர் ஆகிய இடங்களில் நடக்கும் பயிற்சி முகாமில் எம்.பி., கனிமொழி கலந்து கொள்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
