தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினம் ஒரு கேள்வி; தேர்வில் இல்லை தோல்வி!

தினம் ஒரு கேள்வி; தேர்வில் இல்லை தோல்வி!

தினம் ஒரு கேள்வி; தேர்வில் இல்லை தோல்வி!


UPDATED : அக் 11, 2009 12:00 AM

ADDED : அக் 11, 2009 08:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2009 12:00 AM ADDED : அக் 11, 2009 08:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் ஸ்ரீ சாய்ராம் மஹாலில் நடந்தது. பகல் 1.00 மணிக்கு 10 ம் வகுப்பு மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி துவங்கியது.

தமிழ்- சிவக்குமார், சச்சிதானந்த ஜோதிநிகேதன் மெ.மே.நி.பள்ளி, கல்லாறு: 
தமிழை பொருத்தவரை கையெழுத்து மிகமுக்கியம். மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதும் போது, முதலில் முதல்படி, இரண்டாவது மெய்படி, மூன்றாவது குறிப்பு சட்டகம் என்று எழுதி கருப்பு இங்க் பேனாவால் அடிகோடு போட வேண்டும். உரைநடையில் 3,4,5,7,9 ஆகிய பாடங்களில் இருந்து 8 மார்க் கேள்வி அதிகளவில் கேட்கின்றனர். தினமும் தமிழ் படிக்க வேண்டும். வாரம் ஒருமுறை மனப்பாட செய்யுளை எழுதி பார்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக விடை எழுதக்கூடாது.

ஆங்கிலம்- மனோன்மணி, ஸ்ரீ வியஜலட்சுமி மெ.மே.நி.பள்ளி, சிறுமுகை:
  நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது போல், பாடத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது. பாடத்தில் உள்ள கேள்வியை படிக்க வேண்டும், படித்ததை எழுதி பார்க்க வேண்டும். கீ விடை எழுதும் போது, கருப்பு இங்க் பேனாவால் கோடு போட வேண்டும். சுருக்கி எழுதும் வினாவிற்கு பெரிய எழுத்தில் தலைப்பு எழுத வேண்டும். தினம் 30 நிமிடம் இலக்கணம் படிக்க வேண்டும்.

கணிதம்- சித்ரா, சச்சிதானந்த ஜோதிநிகேதன் மெ.மே.நி.பள்ளி: 
தினமும் கணக்குகளை போட்டு பார்த்து வேகமாக எழுதிப் பழக்க வேண்டும். வீட்டில் தேர்வு எழுதிப் பழக வேண்டும். அனைத்து வினாக்களுக்கும் 2 மணி நேரத்தில் விடை எழுதி முடிக்க வேண்டும். கடைசி 30 நிமிடத்தில் போட்ட கணக்குகளை ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.

இயற்பியல் - ஷீலாகிரேஸி, சச்சிதானந்தஜோதி நிகேதன் மெ.மே.நி.பள்ளி: 

முதலில் தன்னை பாடம் படிக்க தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எத்தனை மார்க் கேள்வியோ அதற்கு தகுந்த முறையில் விடை எழுத வேண்டும். ஐந்து மதிப்பெண் வினாவிற்கு இரண்டு மதிப்பெண் விடை எழுதக் கூடாது. பெரிய வினா எழுதும் போது பிரின்ஸ்பில் எழுத வேண்டும்.

வேதியியல் - சரஸ்வதி, சச்சிதானந்த ஜோதி நிகேதன் மெ.மே.நி.பள்ளி:

  கேள்வித்தாளில் உள்ள வினாவிற்கு தகுந்த முறையில் நேரத்தை பிரிக்க வேண்டும். கேட்ட கேள்விக்கு மட்டும் விடை எழுத வேண்டும். பெரிய கேள்விக்கு விடை எழுதும்போது, விரிவாகவும், வேதியியல் சமன்பாடும் அவசியம் குறிப்பிட வேண்டும். வேதியியல் சமன்பாடு, வேதிவிணை இரண்டு பக்கமும் பெயர் எழுத வேண்டும். விதி எழுதி விரிவாக்கம் செய்ய வேண்டும்.

விலங்கியல் - ஹேமலதா, சச்சிதானந்த ஜோதி நிகேதன் மெ.மே.நி.பள்ளி:
வினாவை முடிந்தவரை பாயின்ட், பாயின்டாக எழுத வேண்டும். படங்கள் அழகாக வரைந்து பாகங்கள் குறிக்க வேண்டும். கலர் பென்சில், ஸ்கேச் பேனாக்களை தவிர்த்து, கருப்பு பென்சிலை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். கீ வினாவிற்கு தலைப்பு எழுதி கோடு போட வேண்டும்.

உயிரியல்- சங்கீதா, சச்சிதானந்த ஜோதி நிகேதன் மெ.மே.நி.பள்ளி: 

கடுமையாக முயற்சி செய்தால் தான் வெற்றி கிடைக்கும். பாடத்தை நேசித்து படிக்க வேண்டும். முதலில் ஒரு கஷ்டமான பாடத்தையும், பின்பு ஈசியான பாடத்தையும் படிக்க வேண்டும். படத்தை அடிக்கடி போட்டு பார்க்க வேண்டும். படத்திற்கு மதிப்பெண் உள்ளதால், அழகாக போட வேண்டும்.

வரலாறு - யசோதை, ஸ்ரீ விஜயலட்சுமி மெ.மே.நி.பள்ளி:
  தலைப்புகள் கொடுத்து ஐந்து கேள்வி கேட்கப்படும். அதற்கு சரியாக விடை எழுதினால் ஐந்து மார்க் வாங்க முடியும்.  பத்து மதிப்பெண்கள் கேள்விக்கு தனி தலைப்பு கொடுத்து விடை எழுத வேண்டும். மேப் கட்டாயம் என்பதால், தினமும் ஓய்வுவேண்டும். சரியாக தெரிந்தால் மட்டுமே ஆண்டை குறிப்பிட வேண்டும். தவறாக குறிப்பிட்டால் மதிப்பெண்கள் குறைந்து விடும்.

புவியியல்- பன்னீர்செல்வம், எஸ்.வி. ஜி.வி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரமடை:  

விடைத்தாளில் அவசியம் கோடு (மார்ஜின்) போட வேண்டும். கோட்டிற்கு வெளியே கேள்வி எண்ணும், கோட்டிற்கு உள்ள பாயின்டும் எழுத வேண்டும். ஒரு பாடத்தில் உள்ள கேள்விகளில் தெரிந்தது, தெரியாது என பிரிக்க வேண்டும்.

அதன் பின்பு புளூப்பிரிண்ட் புத்தகத்தை வைத்து, அதில் படிக்காத கேள்விகள் இடம்பெற்று இருந்தால், அதை படிக்க வேண்டும். தினம் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு கேள்வி படிக்க வேண்டும். 30 நாளில் 30 வினாக்கள் படிக்க முடியும். பத்து மாதங்களில் ஒவ்வொரு புத்தகங்களிலும் 300 வினாக்கள் படிக்க முடியும். எனவே இப்போது இருந்து படித்தாலே நீங்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us