தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் வாழ முயலும் மாணவர்!

கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் வாழ முயலும் மாணவர்!

கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் வாழ முயலும் மாணவர்!


UPDATED : அக் 11, 2009 12:00 AM

ADDED : அக் 11, 2009 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2009 12:00 AM ADDED : அக் 11, 2009 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதன் விவரம் வருமாறு:- வேர்க்கிளம்பியை அடுத்த செட்டிச்சார் விளையை சேர்ந்தவர் சந்திரா. பால்வியாபாரி. மனைவி பேபி. இவர்களுக்கு பிர்ளாஜோஸி, சுஜின்ஜோஸ் என்ற இரண்டு பிள்ளைகளுண்டு. இதில் சுஜின்ஜோஸ் இரண்டு கைகளுமின்றி பிறந்தவர். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற கூற்றுக் கேற்ப சுஜின் தனது பள்ளிப்படிப்பை பூவன்கோட்டிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடர்ந்தார். எழுதுவது முதல் படம் வரைவது வரை காலால் வெகு சாமர்த்தியமாக செய்தார். அவரது கல்வி பசியை ஆசிரியர்கள் ஆற்ற பள்ளியில் வயிற்றுப்பசியை சோறூட்டி பள்ளி ஆயா நீக்கியுள்ளார்.

காலால் தேர்வு எழுதிய அந்த மாணவன் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து தக்கலையிலுள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்தில் ஹெச்டிசிஏ படிக்க சேர்ந்தார். காலால் கணினியை இயக்கி நல்ல முறையில் முடித்து ஹெச்டிசிஏ சான்றிதழும் பெற்றார். மீண்டும் அவர் விடா முயற்சியுடன் மல்டிமீடியா படிக்க போவதாகவும் தெரிகிறது. எது எப்படியாயினும் உடல் ஊனமடைந்தும் மனதில் ஊனமின்றி முழு முயற்சியோடு படிக்கும் அந்த இளைஞனை போன்ற பலருக்கும் அரசு நிறுவனம் என்ன பொக்கிஷம் வழங்க உள்ளதோ? என்பதை காலந்தான் பதில் சொல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us