தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் சந்திப்பு

புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் சந்திப்பு

புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் சந்திப்பு


UPDATED : அக் 12, 2009 12:00 AM

ADDED : அக் 12, 2009 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2009 12:00 AM ADDED : அக் 12, 2009 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளிகள் என்றால், தரம் குறைந்தவை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவி களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.


இந்த வகையில், புழுதிவாக்கம், அரசு மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன.

அவர்களுக்கு வீட்டிலும் கல்வி ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நேற்று பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பொது தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் வீட்டு சூழ்நிலை குறித்தும்; மாணவ, மாணவிகள் படிக்க வேண்டிய முறை குறித்தும் பெற்றோரிடம் பள்ளி ஆசிரியர்கள் விளக்கினர்.

இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் கோபால் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பத்தாவது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் சோர்வு இல்லாமல் படிக்கும் வகையில் ஹெல்ப் பார் எஜுகேஷன், லயன்ஸ் கிளப் ஆகிய அமைப்பின் சார்பில் இலவச சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகின்றது.

வீட்டிலும் மாணவ, மாணவிகள் படிப்பதை ஊக்கப்படுத்தும் அவர்களின் பெற்றோர் சந்திப்பு இன்று (நேற்று) நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் தேர்ச்சி சதவீதம் நிச்சயம் அதிகரிக்கும் என நம்பிக்கை உள்ளது.

மேலும், கடந்த முறை தேர்வில் சிறந்து விளங்கிய ஐந்து மாணவ, மாணவிகளை மெட்ராஸ் கோஸ்ட்டல் ரவுண்ட் டேபிள் என்ற அமைப்பு தத்தெடுத்து இலவசமாக இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்க வைக்கின் றனர்.
இது மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்துவதாக உள்ளது. இது போல பல தொண்டு நிறுவனங்கள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் வாழ்க்கை முன் னேற்றத்திற்கு உதவவேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us