UPDATED : அக் 13, 2009 12:00 AM
ADDED : அக் 13, 2009 12:54 PM
அ நிறம் | அளவு
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் முதல் பெண்மணி எலினர் ஆஸ்ட்ரோம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியானா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார் அவர்.
காடுகள், மீன் வளம், மேய்ச்சல் நிலங்கள் போன்ற பொது வளங்களை அரசு அல்லது தனியார் நிறுவனங்களைவிட மக்களே வெற்றிகரமாக நிர்வாகிக்க முடியும் என்பதை தனது ஆய்வின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் எலினர்.
வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வளிக்கும் நடைமுறைகள் குறித்த ஆய்வுகளுக்காக பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு பெற வில்லியம்சன் தேர்வு பெற்றுள்ளார் என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது. பெர்க்கிளியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் வில்லியம்சன்.
ராயல் ஸ்வீடீஷ் அகாதெமி ஆப் சயின்சஸ் அமைப்பு வழங்கும் 1.4 மில்லியன் டாலர் பரிசு இந்த இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
