தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 முடித்ததும் நேரடியாக ஐ.ஐ.எஸ்.,யில் சேர முடியுமா?

பிளஸ் 2 முடித்ததும் நேரடியாக ஐ.ஐ.எஸ்.,யில் சேர முடியுமா?

பிளஸ் 2 முடித்ததும் நேரடியாக ஐ.ஐ.எஸ்.,யில் சேர முடியுமா?


UPDATED : அக் 13, 2009 12:00 AM

ADDED : அக் 13, 2009 01:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2009 12:00 AM ADDED : அக் 13, 2009 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆம், இனி சாத்தியம். பெங்களூரு நகரில் உள்ள ..எஸ்., கல்வி நிறுவனம், வரும் 2011ல், நான்காண்டு அறிவியல் பட்டப்படிப்பை ஆரம்பிக்க உள்ளது.


பிளஸ்

2 மற்றும் சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பி.யு.சி., படிப்பு முடித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். எட்டு செமஸ்டர் தேர்வு உள்ள இந்த பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள், முதல் மூன்று செமஸ்டரில், அறிவியல் சம்பந்தப்பட்ட தேர்வுகள் எழுத வேண்டும்; அடுத்த இரண்டு செமஸ்டர்களில் இன்ஜினியரிங் தொடர்பான படிப்புகளில் தேர்வு எழுத வேண்டும். கடைசி மூன்று செமஸ்டர்களில் சிறப்பு பாடங்களில் தேர்வு எழுத வேண்டும்.


அறிவியல்

படிப்புகளை மாணவர்கள் எடுப்பதில்லை. பெரும்பாலோர் இன்ஜினியரிங் தொடர்புடைய படிப்புகளை மட்டுமே எடுத்து, வேலை தேடுகின்றனர். ஆராய்ச்சி மனப்பான்மை குறைகிறது என்று கல்வியாளர்கள் குறைபட்டுவந்தனர். இதைத்தொடர்ந்து, அறிவியல் படிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் சலுகை அளிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, ஏற்கனவே, இரு உயர்கல்வி அறிவியல் நிறுவனங்களில் அறிவியல் பட்டப்படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.


இதற்கு

மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ..எஸ்.,சில் அறிவியல் பட்டப்படிப்புகளை ஆரம்பிக்க அதன் உயர் கவுன்சில் முடிவு செய்தது. அறிவியல் பாடங்களை தவிர, மெக்கானிக்கல் உட்பட இன்ஜினியரிங் பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம். "அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளை சேர்த்து தருவதன் நோக்கம், மாணவர்களுக்கு இரு தரப்பிலும் வேலை வாய்ப்பு பெற முடியும் என்பதால் தான்; மேலும், அறிவியல் ஆராய்ச்சிகளில் மாணவர்கள் ஈடுபட முடியும் என்பது ஒரு முக்கிய காரணம்&' என்று ..எஸ்., தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us