UPDATED : அக் 14, 2009 12:00 AM
ADDED : அக் 14, 2009 12:53 PM
அ நிறம் | அளவு
ஒவ்வொரு பொருளுக்கும் சர்வதேச அளவில் ஒப்பு கொள்ளப்படும் ஒரே சீரான தரம் அவசியம். இதனை கருத்தில் கொண்டு சர்வதேச தர நிர்ணய அமைப்பு(ஐ.எஸ்.ஓ) 1947ம் ஆண்டு ஜெனிவாவில் நிறுவப்பட்டது.
தற்போது
சுமார் 130 உறுப்பு நாடுகளுடன் இந்த அமைப்பு செயல்படுகிறது.உலக அளவில் தரம் குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்கவும், தரம் குறித்த பல்வேறு தளங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானவர்களை சிறப்பிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் அக்.14ம் நாள் உலக தர நிர்ணய தினமாக அனுசரிக்கப்படுகிறது.கடந்த
1946ம் ஆண்டு இதே நாளில்தான் லண்டனில் 25 நாடுகள் கூடி, உலக அளவில் தர நிர்ணயத்தின் அவசியம் குறித்து விவாதித்தது. அதன் விளைவாக சர்வதேச தர நிர்ணய அமைப்பும் உருவானது. இதை நினைவு கூரும் விதமாக இந்த நாளில் உலக தர நிர்ணய தினம் உள்ளது.மின் மற்றும் மின்னணு இன்ஜினியரிங் துறைக்கு ஐ.இ.சி., யும், தொலைதொடர்பு துறைக்கு ஐ.டி.யூ., வும், பிற அனைத்து துறைகளுக்குமான சர்வதேச தர நெறிமுறைகளை ஐ.எஸ்.ஓ., வும் வகுத்துள்ளது.இவை
கடந்த 32 ஆண்டுகளாக உலக தர நிர்ணய தினத்தை அனுசரிக்க வலியுறுத்தி வருகிறது.நடப்பாண்டில் அனுசரிக்கப்படும் 33வது உலக தர நிர்ணய தினத்தின் மைய கருத்து காலநிலை மாற்றம். உலக அளவில் பொருட்கள் தயாரிப்பில் தர நிர்வாகம் மற்றும் தர உறுதிப்பாட்டுக்கான நெறிமுறைகளை செம்மையாக பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு உலக அளவிலான அங்கீகாரமாக ஐ.எஸ்.ஓ., 9000 தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.அதுபோல்
, சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு நிர்வாகத்திற்கான அங்கீகாரமாக ஐ.எஸ்.ஓ., 14000 வழங்கப்படுகிறது. உணவு பொருட்கள் குறித்த தர நிர்ணயம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமும், உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமும் இணைந்து கோடக்ஸ் அலிமென்டாரியஸ் என்ற அமைப்பினை 1962ம் ஆண்டு துவங்கின.இந்த அமைப்பு 165 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.உணவு
பொருட்களின் தரம் மற்றும் உணவினை பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகளை காப்பது போன்ற பணிகளுடன் உலக அளவில் உணவு பொருட்களுக்கு தர சான்று வழங்கும் பணியினையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.இந்தியாவில் தரமான பொருட்களுக்கு சான்று வழங்கும் பணியினை இந்திய தர பயிலகம் மேற்கொள்கிறது.1986
ம் ஆண்டு முதல் இந்திய தர நிர்ணய அமைப்பு என்ற பெயரில் இவ்வமைப்பு செயல்படுகிறது. 1986ல் கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டத்தின் அடிப்படையில் இவ்வமைப்பு செயல்படுகிறது.ஐ.எஸ்.ஓ., வில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைப்பான இது மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு செயல்படுகிறது. உணவு மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களை பொறுத்தவரையில் இந்திய அளவில் தரச்சான்று வழங்கும் பணியினை மத்திய அரசின் வேளாண்துறையின் ஒரு அங்கமான வேளாண் கூட்டுறவுத்துறை மேற்கொள்கிறது.தரமுத்திரையினை
அக்மார்க் என்ற பெயரில் வழங்கி வருகிறது. 1937ம் ஆண்டின் வேளாண் பொருட்கள் தரநிர்ணயம் மற்றும் குறியீடு சட்டம் மற்றும் 1988ம் ஆண்டின் பொது தர நிர்ணயம் மற்றும் குறியீடு விதிகள் அடிப்படையில் அக்மார்க் தரச்சான்று வழங்கப்படுகிறது.கோடக்ஸ் வகுத்துள்ள தர குறியீடுகள் இந்திய சூழலுக்கு ஏற்ப அக்மார்க் வழங்க பயன்படுகிறது.தமிழகத்தில்
மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து அக்மார்க் தர சான்றளிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 30 மாநில அக்மார்க் தரப்பிரப்பு ஆய்வகங்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.தரம் என்பது கடைபிடித்தே தீர வேண்டிய பொது நெறிமுறை என்பதை ஒவ்வொரு உற்பத்தியாளரும் உணரும் விதத்திலும், தரமான உணவினை பெறுதல், அதற்கான தொகையினை செலுத்தும் நுகர்வோரின் உரிமை என்பதையும் உணரும் வகையில் ஒவ்வொருவரும் இந்த உலக தர நிர்ணய நாளில் உறுதி ஏற்போம்.
