UPDATED : அக் 14, 2009 12:00 AM
ADDED : அக் 14, 2009 01:01 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில், ஹைடெக் கார்பன் தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலை ஜன சேவா டிரஸ்ட் சார்பில், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவியரின் மாதவிடாய் கால அவசர வசதிக்காக தானியங்கி நாப்கின் மிஷின் வழங்கும் விழா கும்மிடிப் பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.தொழிற்சாலையின் தலைவர் ரதி தலைமையில் நடந்த விழாவில் துணைத் தலைவர் மிஸ்ரா, மனித வள மேலாளர் ரவிக்குமார், கண்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியின்
தலைமை ஆசிரியர் ராமசந்திரன் வரவேற்றார்.விழாவில் கும்மிடிப்பூண்டி பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கவரைப் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், ஆத்துப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 19 ஆயிரம் மதிப்புள்ள தானியங்கி நாப்கின் மிஷின்கள் மற்றும் ஆயிரம் நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டன.மூன்று
ஒரு ரூபாய் நாணயங்களை மிஷினுக்குள் செலுத்தினால் ஒரு நாப்கின் கிடைக்கும் வசதி கொண்ட தானியங்கி நாப்கின் மிஷினை உமாரதி துவக்கி வைத்தார். இவ்வசதி மூலம் ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த 5,200 மாணவியர் பயன்பெறுவர். உதவித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.