தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொபைல் கம்யூனிகேஷன்: அண்ணா பல்கலை. - பி.எஸ்.என்.எல்., ஒப்பந்தம்

மொபைல் கம்யூனிகேஷன்: அண்ணா பல்கலை. - பி.எஸ்.என்.எல்., ஒப்பந்தம்

மொபைல் கம்யூனிகேஷன்: அண்ணா பல்கலை. - பி.எஸ்.என்.எல்., ஒப்பந்தம்


UPDATED : அக் 14, 2009 12:00 AM

ADDED : அக் 14, 2009 01:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2009 12:00 AM ADDED : அக் 14, 2009 01:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி. மன்னர் ஜவஹர், பி.எஸ்.என்.எல்., தலைமைப் பொது மேலாளர் டி. வரதராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.


அப்போது மன்னர் ஜவஹர் கூறியதாவது: மொபைல் கம்யூனிகேஷன் துறையில் 5 நாள் பயிற்சி அளிக்கப்படும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இன்ஜினியரிங் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். அடுத்த கட்டப் பயிற்சியில் வேறு இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் இறுதியாண்டில் 32 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படும்.

அடுத்த ஆண்டிலிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 152 பொறியியல் கல்லூரி மாணவர்களில் இந்த நான்கு பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் இந்தப் பயிற்சி அளிக்கப்படும் என்றார் மன்னர் ஜவஹர்.

மீனம்பாக்கத்தில் உள்ள டெலிக்காம் பயிற்சி மையத்தில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு புத்தொளிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் (ரூ.3,750) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தியரி வகுப்புகள் கல்லூரிகளிலும் செய்முறை பயிற்சிக்கு பி.எஸ்.என்.எல்., நிறுவன வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் வரதராஜன் குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us