சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பில் மதிப்பீடு எப்படி?: சுற்றறிக்கை
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பில் மதிப்பீடு எப்படி?: சுற்றறிக்கை
UPDATED : அக் 14, 2009 12:00 AM
ADDED : அக் 14, 2009 02:19 PM
அ நிறம் | அளவு
இதுகுறித்த சுற்றறிக்கை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களை எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பது இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வகையான மதிப்பீட்டு முறைகள் இதில் கடைப்பிடிக்கப்படும். ஒன்று பார்மேட்டிவ் அசெஸ்மெண்ட். இதில் நேர்காணல், க்விஸ், புராஜக்ட் ஒர்க், செய்முறை பயிற்சித் திட்டங்கள் போன்றவை இருக்கும்.
சமேட்டிவ் அசெஸ்மெண்ட் பிரிவின் கீழ் ஆறுமாதத்திற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கான பாடங்களில் மாணவர்களின் அறிவுநிலை எந்த அளவுக்கு உள்ளது என்பதைச் சோதித்து அறிய இத்தேர்வு உதவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்மேட்டிங் டெஸ்ட்டுக்கு 40 சதவீதமும் சமேட்டிவ் டெஸ்ட்டுக்கு 60 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கி மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதாவது தற்போது 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த அக்டோபர் மாதத்திலிருந்தே மாணவர்களை மதிப்பீடு செய்வது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிலிருந்தே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடிங் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
