தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் வாசகர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தினமலர் வாசகர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தினமலர் வாசகர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு


UPDATED : அக் 15, 2009 12:00 AM

ADDED : அக் 15, 2009 01:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2009 12:00 AM ADDED : அக் 15, 2009 01:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பதினொன்றாயிரம் காலிப்பணியிடங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அடுத்த மாதம் தேர்வு நடத்த உள்ளது. நாடு முழுவதும் 33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசகர்களுக்காக சில மாதங்களுக்கு முன், தினமலர் இலவச ஆலோசனை முகாமை நடத்தியது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயன்பெற்றனர். இதன் தொடர்ச்சியாக அக்.3 ல் மாதிரித் தேர்வை தினமலர் நடத்தியது. இத்தேர்வில் முதல் 50 இடங்களை பெற்றவர்களுக்கு தினமலர் சார்பில் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிறுவனத்தில் ஒரு மாத இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


துவக்க விழாவில் தலைமை வகித்த ஸ்டேட் வங்கி தலைமை மேலாளர் பி.சுந்தர் பேசுகையில், வங்கி வேலை பாதுகாப்பானது. சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் நன்றாக முயற்சி செய்தால் நீங்கள் வேலை பெறலாம்.தேர்வு எழுதும் முன் நல்ல பயிற்சி அவசியம். உங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


இலவச பயிற்சி அளிக்கும் தினமலர் இதழின் சமூக பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது  என்றார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் பயிற்சி முறைகள் குறித்து விளக்கினார். ஆசிரியர் ராஜ்மோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us