தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பாகப் படிப்பது மாணவியரே....

சிறப்பாகப் படிப்பது மாணவியரே....

சிறப்பாகப் படிப்பது மாணவியரே....


UPDATED : அக் 16, 2009 12:00 AM

ADDED : அக் 16, 2009 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2009 12:00 AM ADDED : அக் 16, 2009 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் புகழ்பெற்ற மெட்ரோ மற்றும் முக்கிய நகரங்களாகிய புனே, ஆமதாபாத், கொச்சி, இந்தூர், ஐதராபாத், போபால், அஜ்மீர், சண்டிகர், சிம்லா, டேராடூன் போன்ற இடங்களில் உள்ள 900 மாணவிகளிடமும் 1200 மாணவர்களிடமும் இன்டர்வியூ முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இந்த ஆய்வில் வெளியான சில முக்கிய தகவல்கள்.

* மொத்த எண்ணிக்கையில் ஒப்பிடும்போது குறைவான பெண்களே படிப்புக்கு வந்தாலும், பெண்களின் படிக்கும் தன்மை ஒருமுகத்தன்மையோடு சிறந்து விளங்குகிறது. மாணவர்களின் வேறுபட்ட பழக்க வழக்கம் மற்றும் சிந்தனைகளின் காரணமாக இவர்கள் மாணவியரைவிட குறைவான தேர்ச்சி விகிதத்தையே பெறுகின்றனர்.

* வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதைத் தீராததாகமாகக் கொண்டு படிக்கும் மாணவியர், லட்சிய நோக்கம் கொண்ட, பாலின உரிமை அதிகம் பெற்ற மாணவர்களைவிட சிறப்பான வெற்றிகளைக் குவிக்கின்றனர்.

* கவனம் செலுத்துதல், தொடர்ந்து நீண்ட காலம் முயற்சி செய்தல் போன்ற குணங்களிலும் மாணவியரின் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கையைவிட இலக்கை அடையும் உத்வேகம் அதிகமாக மாணவியரிடம் இருக்கிறது.

* நமது சமூகப்பிண்ணனியில் இயல்பாகவே மாணவர்களுக்கு சில வசதிகளும், வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதால், அவர்களின் ஒருங்கிணைப்புத்தன்மை கூராக இருப்பதில்லை. இவ்விஷயத்தில் சிறப்புத் தன்மையுடைய மாணவியர் கல்வித்தேர்வுகளிலும், இதர போட்டித்தேர்வுகளிலும் முதலிடம் மற்றும் முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us