UPDATED : அக் 16, 2009 12:00 AM
ADDED : அக் 16, 2009 06:17 PM
அ நிறம் | அளவு
அசிஸ்டன்ட் இன்டெலிஜென்ஸ் ஆபிசர் கிரேடு 2 என இது அழைக்கப்படுகிறது. மொத்த காலியிடங்கள் 500. பொதுப் பிரிவினருக்கு 253 காலியிடங்களும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 135 இடங்களும் எஸ்.சி.,பிரிவினருக்கு 75 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 37 காலியிடங்களும் உள்ளன.
தகுதிகள்: இப் பணிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு மத்திய அரசுப் பணிகளில் தரப்படும் வயது சலுகைகள் தரப்படும்.
தேர்வு முறை: இப் பணிக்காக போட்டித் தேர்வு ஒன்றும் நேர்முகத் தேர்வு ஒன்றும் நடத்தப்படும். திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் இத் தேர்வு முறைகள் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30க்கு 21 செ.மீ., அளவுள்ள தாளில் உங்களைப் பற்றிய முழு விபரங்களை எழுதி சுய முகவரியிட்ட கார்டு ஒன்றையும் இணைக்க வேண்டும்.
சான்றிதழ்களின் நகல்களையோ ஒரிஜினலையோ இணைக்கக் கூடாது. 10க்கு 23 செ.மீ., அளவுள்ள சுயமுகவரியிட்ட உறையையும் இணைக்க வேண்டும்.
எந்தப் பணிக்கான விண்ணப்பம் என்பதையும் எந்த தேர்வு மையம் என்ப-தையும் அனுப்பும் உறையின் இடது மேற்புறமாக குறிப்பிட வேண்டும். இந்த விண்ணப்பமானது சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: நவம்பர் 9, 2009.
