தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி


UPDATED : நவ 03, 2009 12:00 AM

ADDED : நவ 03, 2009 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2009 12:00 AM ADDED : நவ 03, 2009 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 85 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 16 மேல்நிலைப்பள்ளிகளும், 10 உயர்நிலை பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் உயர் வகுப்புகளில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

மாநகராட்சிப் பள்ளி மாணவியர், சமீபகாலமாக கல்வியிலும், விளையாட்டிலும் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அதே நேரத்தில், மாணவர் பள்ளிகளின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது.குறிப்பாக, சில உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் நடவடிக்கைகள், ஆசிரியர்களை மட்டுமின்றி சமூகத்தையே அச்சுறுத்துகின்றன. வகுப்புகளை கட் அடிப்பது, சிகரெட் பிடிப்பது உள்ளிட்ட பல தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சீரநாயக்கன்பாளையம், செல்வபுரம் பகுதிகளில் பள்ளிச் சீருடையிலேயே சில மாணவர்கள், டாஸ்மாக் பார்களிலும், பகிரங்கமாக வெளியிடங்களிலும் வைத்து மது அருந்தும் செயல்களும் நடக்கின்றன.


அரசுப் பள்ளி மாணவர்கள் சிலரும் இந்த பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலேயே மாணவர்கள் இவ் வாறு வழி தவறிப் போவதற்கு, சமூகச் சூழலே முக்கியக் காரணம். பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் வழிகாட்டுதல், பள்ளி ஆசிரியர்களின் மெத்தனம் என இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இத்தகைய மாணவர்களை, கண்டிப்பு காட்டியோ, கடுமையான நடவடிக்கை எடுத்தோ மாற்றி விட முயற்சிப்பது, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஆசிரியர்களின் கருத்து. ஏனெனில், கண்டிப்பு காட்டும் ஆசிரியர்கள் தாக்கப் பட்ட சம்பவமும் இதற்கு முன் நடந்துள்ளது.போலீஸ் நடவடிக்கை, டி.சி., கொடுப்பது போன்ற நடவடிக்கைகளால் அந்த மாணவர்களின் ஒட்டு மொத்த எதிர்காலமும் பாழாகி விடும் அபாயமுண்டு. இந்த மாணவர்களிடம் அடிப் படையான மனமாற்றத்தை ஏற்படுத்துவதே, இதற்கு நிரந்தரமான, சரியான தீர்வாக அமைய முடியும்.
 
இதைச் செய்வது மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கோ, நிர்வாகத்துக்கோ அவ் வளவு எளிதான விஷயமில்லை. சவாலுக்குரிய இந்த பணியை எடுத்துச் செய்ய முன் வந்துள்ளது ஈஷா யோகா மையம். அறிவார்ந்த, ஆன்மிக சமுதாயத்தை ஏற்படுத்தும் பணியிலுள்ள இந்த மையம், இதையும் ஏற்றுக் கொண்டுள்ளது.மாணவர்களிடத்தில் உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை நல் வழிக்கு கொண்டு வருவதே இத்திட்டம்.
 
இதற்காக, மாநகராட்சி பள்ளிகளைத் தத்தெடுத்துள்ள ஈஷா யோகா மையம், முதற்கட்டமாக, மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியை துவக்கி விட்டது.மொத்தமுள்ள 900 ஆசிரியர்களில் 600 பேருக்கு தற்போது பயிற்சி நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக, இவர்களைக் கொண்டு 9 மற்றும் 11வது வகுப்பு மாணவ, மாணவியர் 2000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இவர்களை முன்னிறுத்தி எக்கோ கிளப் துவக்கவும் ஈஷா யோகா மையம் திட்டமிட்டுள்ளது. மரம் வளர்த்தல், பள்ளி வளாகத்தில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தவும், யோகா பயிற்சி வழங்கி, அவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தவும் முயற்சி எடுக் கப்படுகிறது. இத்திட்டம் மாணவர்களை நல் வழிப்படுத்துவதோடு, ஏழ்மை மற்றும் அறியாமையில் உள்ள அவர்களின் குடும்பத்திலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்று மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.  எதிர்பார்த்தபடி இத்திட்டம் வெற்றி பெற்றால், கோவை மாநகராட்சிப் பள்ளிகள், மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாக விளங்கும் வாய்ப்பிருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us