தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்க பல்கலையுடன் பி.எஸ்.ஜி., கல்லூரி ஒப்பந்தம்

அமெரிக்க பல்கலையுடன் பி.எஸ்.ஜி., கல்லூரி ஒப்பந்தம்

அமெரிக்க பல்கலையுடன் பி.எஸ்.ஜி., கல்லூரி ஒப்பந்தம்


UPDATED : நவ 03, 2009 12:00 AM

ADDED : நவ 03, 2009 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2009 12:00 AM ADDED : நவ 03, 2009 12:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பி.எஸ்.ஜி., நிர்வாகவியல் கல்லூரியில் நடந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், சான் டியாகோ ஸ்டேட் பல்கலை பேராசிரியர் நான்சி மர்லின் மற்றும் பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி கையெழுத்திட்டனர்.அமெரிக்க பல்கலை பேராசிரியர் நான்சி மர்லின், நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

இரு கல்வி நிறுவனங்களிலும் இளங்கலை மற்றும் நர்சிங் படிப்புகள் படிக்கும் மாணவர்களை பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது, பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனத்துக்கு பொது சுகாதாரம் மற்றும் வர்த்தக நிர்வாகம் ஆகிய கல்வித் திட்டங்களை சான் டியாகோ ஸ்டேட் பல்கலை அளிப்பது ஆகிய இரு அம்சங்களை செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.


நர்சிங் படிக்கும் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்படி, இந்தியாவில் சில வாரம் அமெரிக்க மாணவர்களும், அமெரிக்காவில் சில வாரம் இந்திய மாணவர்களும் தங்கியிருப்பர். இந்த காலகட்டங்களில் வெப்ப பிரதேசமான இந்தியாவில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் விபரங்களை அமெரிக்க மாணவர்களும், அமெரிக்க நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை பற்றி இந்திய மாணவர்களும் அறிந்து கொள்வர்.
 
பொது சுகாதாரத் திட்டத்தின்படி, பயோமெட்ரி, சுற்றுச்சூழல் ஆரோக்கியம், உடல் நல ஊக்குவிப்பு பற்றி இந்திய மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும். வர்த்தக நிர்வாக திட்டத்தின்படி, சர்வதேச வர்த்தகம், தொழில் துவங்குதல், மனிதவள நிர்வாகம், கார்ப்பரேட் நிர்வாகம் பற்றி கற்றுத்தரப்படும். ஆக, நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
 
அமெரிக்க ஸ்டேட் பல்கலை கவுரவ பேராசிரியர் மாதவன் கூறுகையில், கல்வி வளர்ச்சி தொடர்பாக உலகின் பல்வேறு பல்கலைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் கோவை பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களுடன் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. 
இந்திய கலை, கலாச்சாரம், வரலாறு, சமூகம், விவசாயம், தொழில் துறை ஆகியவற்றை அமெரிக்க மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்றார்.
 
கோவையில் மூன்று நாட்கள் தங்கியுள்ள அமெரிக்க குழுவினர், மாணவர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். பி.எஸ்.ஜி., அறங்காவலர் ராஜன், முதன்மை செயல் அலுவலர் சுவாமிநாதன், நிர்வாகவியல் கல்லூரி இயக்குனர் நந்தகோபால், அமெரிக்க பல்கலையின் இன்ஜி., துறைத் தலைவர் டேவிட் ஆகியோர் பேட்டியின்போது உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us