ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த பள்ளி மாணவருக்கு நிதியுதவி
ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த பள்ளி மாணவருக்கு நிதியுதவி
UPDATED : நவ 04, 2009 12:00 AM
ADDED : நவ 04, 2009 12:32 PM
அ நிறம் | அளவு
மத்திய அரசின் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு குழுமம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அவிநாசி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி, அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
தடகள போட்டிகளில், 3,000 மீட்டர் (3 கி.மீ.,) ஓட்டப்பந்தயம் நடந்தது. பள்ளியின் பெரிய மைதானத்தை 15 முறை (சுற்றுக்கு 200 மீட்டர்) சுற்றி வர வேண்டும்.ஏழாம் வகுப்பு படிக்கும் கவுதம், சளைக்காமல் 15 சுற்று ஓடி, நான்காவதாக வந்து ஆச்சரியப்பட வைத்தான். ஸ்போர்ஸ் ஷூ அணியாமல், வெற்று கால்களுடன் ஓடி சாதித்த கவுதம் குறித்து, அக்., 31ம் தேதி வெளியான தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த நாமதேவன் என்பவர், கவுதமுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்க ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அவிநாசி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் பிலோமின்ராஜ், தலைமை வகித்தார். ஆசிரியர் குரூஸ் ஆரோக்கிய செல்வராஜ் வரவேற்றார்.
மாணவன் கவுதம் கூறுகையில், நிறைய சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற் பட்டுள்ளது. வருங்காலத்தில் மிகப்பெரிய ஓட்டப்பந்தய வீரனாவது, வாழ்நாள் லட்சியம். திறமையை அங்கீகரித்து வெளிச்சம் போட்டு காட்டிய தினமலர் நாளிதழுக்கு நன்றி என்றார்.
