பள்ளிகள் திறந்ததும் பாடப் புத்தகங்கள்: கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிகள் திறந்ததும் பாடப் புத்தகங்கள்: கல்வித்துறை அறிவிப்பு
UPDATED : நவ 04, 2009 12:00 AM
ADDED : நவ 04, 2009 12:44 PM
அ நிறம் | அளவு
இதில், எவ்வித பின்னடைவும் ஏற்படாது என்று, பள்ளிக் கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.
பள்ளி
பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான விலையை நிர்ணயம் செய்வதில் இழுபறி நிலை, தமிழக அரசுடன் பாடநூல் அச்சிடுவோர் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி, இதனால் மாணவர் களுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் ஆகியவை குறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறைக்குப் பின், பள்ளிகள் திறக்கும் நாளில் ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் கிடைப்பதற்கான பணியை, பாடநூல் கழகம் செய்து வருகிறது.
2010-2011
ம் கல்வி ஆண்டிற்கு, இரண்டு முதல் ஐந்து வகுப்புகள் மற்றும் ஏழு முதல் 12ம் வகுப்புகள் வரை, ஆறு கோடியே 43 லட்சம் பாட நூல்கள் தேவை. இதில், இரண்டு கோடியே, 80 லட்சம் பாட நூல்கள் இருப்பில் உள்ளன. மீதமுள்ள மூன்று கோடியே 63 லட்சம் பாட நூல்களை, பள்ளிகள் திறக்கும்போது வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, பாடநூல் அச்சிடும் பணியை மேற்கொள்ளும் தனியார் அச்சகங்கள் தவிர, அரசு அச்சகங்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அச்சகங்கள், பல மாநிலங்களில் உள்ள தனியார் அச்சகங்களையும் பாடநூல் அச்சிடும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சமச்சீர்
கல்வியில் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு தேவையான ஒரு கோடி பாட நூல்களின் தரத்தை மேம்படுத்தி, உரிய காலத்தில் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இவற்றை அச்சிட, நவீன வசதியுள்ள அச்சகங்கள் சேர்க்கப்படும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் நாளன்று, அனைத்து மாணவர்களுக்கும் பாட நூல்கள் வழங்கப் படும். சமச்சீர் கல்விக்கு தேவையான பாட நூல்களை வினியோகம் செய்வதிலோ, மற்ற வகுப்புகளுக்கு தேவையான பாட நூல்களை வினியோகம் செய்வதிலோ, எவ்வித பின்னடைவும் ஏற்படாது. இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.எந்த
ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அரசு அச்சகங்கள், கூட்டுறவுத் துறை அச்சகங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனியார் அச்சகங்களில் பாட நூல்கள் அச்சிடும் பணி நடக்கும் என்று அறிவித்திருப்பதன் மூலம், பாட நூல்களை அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்ற உண்மையை பள்ளிக் கல்வித்துறை ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பாடநூல் பிரச்னை குறித்து, பாடநூல் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. உரிய காலத்தில் பாட நூல்களை அச்சடிப்பது குறித்து, விரிவாக விவாதித்ததாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள அச்சகங்களையும், பாடநூல் அச்சடிப்புப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து, அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
