UPDATED : ஏப் 18, 2021 12:00 AM
ADDED : ஏப் 18, 2021 01:17 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி 8 ம் வகுப்பு மாணவி இறைமலர். இவர் தேசிய அளவில் பல்கலை, கல்லுாரிகள் நடத்திய ஆன்லைன் கருத்தரங்கு, வினாடி வினா போட்டிகளில் பங்கேற்று 100 க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
மாணவியை, திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி பாராட்டி பேசுகையில், &'&'மாணவர்கள் வருங்காலங்களில் உயர்பதவி அடையும் போது சமுதாய மேம்பாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்&'&' என்றார். பள்ளிச் செயலாளர் மங்களராம், காயத்ரி, முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், ஞானபிரியதர்ஷினி, வித்யா, பிரபா, மணிமேகலை பாராட்டினர்.
