தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருச்சி இளம்பெண் நிஷாந்தினி ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு

திருச்சி இளம்பெண் நிஷாந்தினி ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு

திருச்சி இளம்பெண் நிஷாந்தினி ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு


UPDATED : நவ 11, 2009 12:00 AM

ADDED : நவ 11, 2009 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2009 12:00 AM ADDED : நவ 11, 2009 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருச்சி வயலூர் ரோடு மெயின் நகரை சேர்ந்த நிஷாந்தினியின் தந்தை ராஜரத்தினம் மண்ணச்சநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது தாயார் சுப்தரா. சகோதரர்கள் மோகன்பாபு, சிவசந்திரன் இருவரும் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.


இவரது தந்தை ராஜரத்தினம் வேலை பார்த்த பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த நிஷாந்தினி, ஜெ.ஜெ., இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியர் பட்டம் பெற்றார். இதன் பின் ஐ.பி.எஸ்., தேர்வெழுதி கடந்தாண்டு வெற்றி பெற்ற நிஷாந்தினி, ஐதராபாத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். தற்போது மேற்கு வங்கத்தில் பணி ஒதுக்கீடு பெற்றுள்ள நிஷாந்தினிக்கு இரண்டு மாதத்துக்கு முன் கேரள மாநிலம் திருச்சூரில் துணை கலெக்டராக பணியாற்றி வரும் ராஜமாணிக்கத்துடன் திருமணம் நடந்தது. ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வாகியுள்ள நிஷாந்தினி கூறியதாவது:

ஐதராபாத்தில் கடந்த ஓராண்டு பயிற்சி பெற்ற நான், சமுதாயத்தில் போலீஸின் சேவை சிறப்பானது என்பதை உணர்ந்தேன். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் திறமை உண்டு என்பதை பெண்கள் உணர வேண்டும். நாடு முழுவதும் 23 பெண்கள் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பயிற்சி முடித்துள்ளதில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். எல்லாத் துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும். ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நான், அடுத்தாண்டு ஜனவரி மாதம் பணியில் சேரவுள்ளேன். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us