தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டூன் பள்ளியில் குடும்பத்தோடு முன்னாள் மாணவர்கள் தங்கலாம்!

டூன் பள்ளியில் குடும்பத்தோடு முன்னாள் மாணவர்கள் தங்கலாம்!

டூன் பள்ளியில் குடும்பத்தோடு முன்னாள் மாணவர்கள் தங்கலாம்!


UPDATED : நவ 12, 2009 12:00 AM

ADDED : நவ 12, 2009 01:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2009 12:00 AM ADDED : நவ 12, 2009 01:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதாவது, அந்த பள்ளியை சேர்ந்த பழைய மாணவர்கள் குடும்பத்துடன் தாங்கள் படித்த பள்ளியில் நான்கு நாட்கள் தங்கி, மகிழ்ச்சியாக நாட்களை கழிக்க உள்ளனர்.


உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ளது டூன் பள்ளி. இது பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட ஏராளமானவர்களை உருவாக்கிய பெருமை வாய்ந்தது. இந்த பள்ளியில் அடுத்த மாதம் 1ம் தேதி குளிர்கால விடுமுறை துவங்குகிறது. தற்போது, இந்த பள்ளி, பிளாட்டினம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


இதை ஒட்டி, இப்பள்ளி அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான காலத்தில், பழைய மாணவர்களுக்கான விருந்தோம்பலை அறிவித்துள்ளது. இதில், இப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு தலைமுறையை சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொள்கின்றனர்.இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


சாக்கர், டென்னீஸ், கூடைப்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த நான்கு நாட்களும் பிரார்த் தனை கூட்டங்களும் நடைபெறும். இதில், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், துணை தலைமையாசிரியர்கள், ஆகியோர் பேசுவர். இந்த காலகட்டத்தில், இசைப்பள்ளி, ஆர்ட், கம்ப்யூட்டர் லேப், நூலகம் ஆகியவை திறந்திருக்கும்.


அனைத்து செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளுக்கும் ஆசிரியர்கள் இருப்பர். பழைய மாணவர்களின் துணைவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் 13ம் தேதி மதிய உணவுக்கு பின், இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஆனந்தா பகுதிக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு, பழைய மாணவர்களின் பள்ளி நினைவுகளை மீண்டும் நினைவுப்படுத்தும் வகையில் அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us