பருவநிலை மாற்றம் குறித்த பள்ளிகளுக்கான குறும்படங்கள் வெளியீடு
பருவநிலை மாற்றம் குறித்த பள்ளிகளுக்கான குறும்படங்கள் வெளியீடு
UPDATED : நவ 12, 2009 12:00 AM
ADDED : நவ 12, 2009 02:37 PM
சென்னை: பருவநிலை மாற்றம் குறித்து பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
‘தமிழக பள்ளிக் கல்வி திட்டத்திற்கு இந்திய-பிரிட்டன் திரைப்படங்கள்’ என்ற தலைப்பில் சென்னை சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையத்தில் நடந்த விழாவில் 16 குறும்படங்கள் அடங்கிய சி.டி.,க்கள் வெளியிடப்பட்டன. அதில் பருவநிலை மாற்றத்திற்கான காரணங்கள், விளைவுகள், மக்களின் பங்கு ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கவுன்சிலின் ‘எதிர்காலத்தில் குறைந்த கார்பன்’ என்ற திட்டத்தின்கீழ் பள்ளிகளுக்காக இந்த குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவியருக்கு பருவநிலை மாற்றம் குறித்து சரியான முறையில் விளக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த குறும்படங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று விழாவில் தெரிவிக்கப்பட்டது.
சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய இயக்குனர் நந்திதா கிருஷ்ணா, தென்மாநில பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குனர் கிரிஷ் கிப்சன், தமிழக முதன்மை வனப் பாதுகாப்பாளர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டர். தொடர்ந்து, பருவநிலை மாற்றம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற பயிலரங்கு நடத்தப்பட்டது.
