தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பறை லெக்சருக்கு முடிவு வருகிறது: அதிரடி மாற்றம்!

வகுப்பறை லெக்சருக்கு முடிவு வருகிறது: அதிரடி மாற்றம்!

வகுப்பறை லெக்சருக்கு முடிவு வருகிறது: அதிரடி மாற்றம்!


UPDATED : நவ 13, 2009 12:00 AM

ADDED : நவ 13, 2009 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2009 12:00 AM ADDED : நவ 13, 2009 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த கருத்தரங்கு, மணி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் உமாநாத் துவக்கி வைத்தார்.
 
ராக் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோரின் சந்தேகங்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கவுரவ ஆலோசகர் விஜயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:
 
தமிழகத்திலுள்ள 6,000 பள்ளிகளில், 3000 பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள். ஒரு கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 84 லட்சம் பேர் ஸ்டேட் போர்டு பள்ளியில் படிக்கின்றனர். தற்போதுள்ள நான்கு கல்வி முறைகளிலும் தனி பாடத்திட்டம், தனி பாட நூல்கள், தனி தேர்வு முறை உள்ளன.நான்கு பாடத்திட்டங்களிலும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் இணைத்து சமச்சீர் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே மாதிரியான கல்வித்திட்டம், ஒரே மாதிரியான தேர்வு, ஒரே மாதிரியான புத்தகங்கள் வரவுள்ளன. அனைத்துக் குழந்தைகளுக்கும் அனைத்து திறன்களும் சென்றடைய செய்வதே லட்சியம். தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகள் அப்படியே தொடரலாம்; கட்டாயம் இல்லை. மாணவர் சேர்க்கை, நிர்வாகத்தில் அரசு தலையிடாது.
 
பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகளில் 50 சதவீதத்தினருக்கு எழுத படிக்க தெரிவதில்லை; 40 சதவீதத்தினருக்கு அடிப்படை கணிதம் தெரியவில்லை என, என்.சி.இ.ஆர்.டி., ஆய்வு கூறுகிறது. வீட்டில் யாரும் கற்றுத் தராமலே சிறு பொருட்களின் பெயர்களை கூறும் குழந்தை, வகுப்பறையில் கற்காததற்கு, வகுப்பறை சூழல் சரியாக இல்லாததே காரணம்.
 
ஐந்தாம் வகுப்பை முடிக்கும் ஒரு குழந்தைக்கு 663 திறன்கள் தேவை. இன்றைய மெட்ரிக் பள்ளிகள் குழந்தைகளை மனப்பாடம் செய்து 100க்கு 100 மதிப்பெண் பெற வைப்பதால், உயர்கல்வி முடிக்கும்போது வேலைக்கான திறன் கூட இல்லாமல் போகிறது. முடிவு எடுக்கும் திறன், சவால்களை சந்திக்கும் திறன் இருப்பதில்லை.சிந்திக்கும் திறன் மிக்கவர்களாக, மாணவர்களை மாற்றுவதாக வகுப்பறைச் சூழல் இருக்க வேண்டும்.

நீச்சல் கற்க நீந்திதான் ஆக வேண்டும். வகுப்பறைச் சூழல் பற்றி படிப்படியாக பயிற்சி அளிக்கப்படும். வகுப்பறையில் பாடங்களை லெக்சர் அடிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நல்ல கல்வியை கொடுக்காததால் இன்று சமுதாயத்தில் ஜாதி, மத வேற்றுமைகள் உள்ளன. இதை களைய, நல்ல மாணவர்கள் தேவை. இதற்கு நல்ல கல்வி வேண்டும். அதை சமச்சீர் கல்வி தரும். இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, விஜயக்குமார் பேசினார்.
 
கருத்தரங்கில், ராக் நிர்வாகிகள் சுவாமிநாதன், பாலசுந்தரம், சவுந்தரராஜன், ரவீந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us