தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திட்டமிட்டு படித்தால் அதிக மதிப்பெண்: ஆசிரியர்கள் ஆலோசனை

திட்டமிட்டு படித்தால் அதிக மதிப்பெண்: ஆசிரியர்கள் ஆலோசனை

திட்டமிட்டு படித்தால் அதிக மதிப்பெண்: ஆசிரியர்கள் ஆலோசனை


UPDATED : நவ 15, 2009 12:00 AM

ADDED : நவ 15, 2009 08:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2009 12:00 AM ADDED : நவ 15, 2009 08:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு டி.வி.ஆர். அகாடமி சார்பில் ஆலோசனை வழங்கும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி காரைக்குடி சுபலட்சுமி மகாலில் நடந்தது.

சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்கியது. காலை முதல் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல்  மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பங்கேற்ற மாணவர்களுக்கு தினமலர் இதழ் சார்பில் மாதிரி வினா விடை புத்தகம்,  பிளஸ் 2 மாணவர்களுக்கு உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் புத்தகம் வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் அளித்த ஆலோசனைகள்:

பத்தாம் வகுப்பு:


பி.ராதாகிருஷ்ணன், காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம்):
கட்டுரை வடிவ விடைகளை முதலில் எழுதவும். அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிக்க புத்தகம் முழுவதும் படிக்கவும். முக்கிய விடைகளை அடிக்கோடிட்டு காட்டவும். மாணவர்கள் இலக்கணத்தில் மதிப்பெண் இழக்கின்றனர். 12 காலங்களையும் நன்கு படித்தால் இதை தவிர்க்கலாம். கட்டுரைகளுக்கு துணை தலைப்பு கொடுக்கவும்.

எம்.டி.சீனிவாசன், எஸ்.எம். எஸ்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (கணிதம்): 
விடைகளுக்கு உரிய இடத்தை ஒதுக்கி வேகமாக, தெளிவாக எழுதவும். வரைபடம் குறித்த கேள்விகளுக்கு உதவிப்படம் அவசியம். இரண்டு, ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு சூத்திரத்துடன் படம் வரைய வேண்டும். பழைய வினாத்தாளை நன்கு படித்து, எழுதி பார்க்க வேண்டும். புத்தகத்தை முழுமையாக படித்து மாதிரி தேர்வு எழுதி பழக வேண்டும்.
ஏ.ஆஞ்சலா மேரி, முத்துப் பட்டணம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி (அறிவியல்):
புத்தகத்தின் பின்புறம் உள்ள மாதிரி கேள்விகளை நன்கு படித்தால் 18 ஒரு மதிப்பெண் நிச்சயம். இரண்டு மதிப்பெண் பகுதிக்கு புத்தகத்தில் உள்ள மூலக்கூறுகளை படிக்கவும். சமன்பாடு, விதிகள் போன்ற கேள்விகளுக்கு புத்தகத்தில் உள்ள விடைகளை அப்படியே எழுத வேண்டும். பண்பு, பயன்கள், வேறுபாடு குறித்த கேள்விகளுக்கு பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஐந்து மதிப்பெண் பகுதியில் படம் வரைய வேண்டிய கேள்விகளுக்கு முதலில் விளக்கம் எழுதி, பிறகு படம் வரையவும். பென்சிலால் மட்டுமே படம் வரைய வேண்டும். ஸ்கெட்ஜ் பயன்படுத்த கூடாது.

மெட்ரிக்.,:


பி.சண்முகசுந்தரி, கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்., பள்ளி (ஆங்கிலம்):

புத்தகத்தை முழுவதும் படித்து எழுதி பார்க்கவும். பத்து ஆண்டுகளுக்குரிய பொது தேர்வு வினாக்களுக்கு விடையளித்து பழகவும். சொந்த நடையில் எழுதவேண்டும்."கைடு&' மூலம் படித்தால் மதிப்பெண் குறையும். புத்தகத்தை மட்டுமே படிக்க வேண்டும். தினமும் இரண்டு பாடங்களில் வினாக்களுக்கு பதில் எழுதி பார்க்க வேண்டும்.
ஜெ.ஜெயபாலன், காரைக்குடி அழகப்பா மெட்ரிக்.,மேல்நிலைபள்ளி (கணிதம்): 
ஒரு மதிப்பெண் பகுதிக்கு புத்தகத்தின் பின்புறம் உள்ள கேள்விகளை படித்தாலே போதும். தினமும் சூத்திரங்களை எழுதி பழக வேண்டும். இரண்டு, ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதி பழக வேண்டும். அதிகாலை இரண்டு மணிநேரம் படித்தால் மனதில் நிற்கும்.

சி.மீனாட்சி, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக்., பள்ளி (அறிவியல் -1):
  இரண்டு, மூன்று மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இருந்தே கேட்கப்படும். ஐந்து மதிப்பெண் பகுதிக்கு புளூ பிரின்ட் அடிப்படையில் படித்தால் போதும். முக்கிய விடைகளை கோடிட்டு காட்ட வேண்டும்.

எம்.மணிமொழி மோகன், கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்., பள்ளி (அறிவியல் - 2):
அனைத்து பாடங்களையும் முழுமையாக படித்தால் நூறு மதிப்பெண் பெறலாம். வரைபடம், விளக்கம் தெளிவாக இருக்க வேண்டும். கைடுகளில் உள்ள விடைகள் சரியா என புத்தகத்தில் ஒப்பிட்டு, பிறகு படிக்கவும். விடைத்தாளை பகுதிகளாக பிரித்து விடை அளித்தால் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும்.

பிளஸ் 2:



ஆர். அண்ணாமலை, எஸ்.எம். எஸ்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம்):
இலக்கண பகுதி மிக முக்கியம். இதை மனப்பாடம் செய்து எழுதுவதால் மதிப்பெண் குறைகிறது. மாணவர்களுக்கு நடைமுறை ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெறமுடியும். புத்தகத்தில் முதல் நான்கு பாடத்தை நன்கு படித்தால் எளிதில் தேர்ச்சி பெறலாம்.

எம்.ஹென்றிபாஸ்கர், எஸ்.எம்.எஸ்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (வேதியியல்):

70 வது கணக்கு தொடர்பான கேள்வி கட்டாயம் கேட்கப்படும். இதை நிச்சயம் படிக்கவும். புத்தகத்தின் பின்புறம் உள்ள கேள்வியை படித்தால் 30 ஒரு மதிப்பெண் நிச்சயம் பெறலாம். வேதி வினைகளை  அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். புளூ பிரிண்ட் கேள்விகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

டீ.ரமா, தேவகோட்டை தூய மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி (இயற்பியல்):

சமன்பாடுகளை கட்டத்துக்குள் எழுதவேண்டும். கணக்குகளில் எண்களை தெளிவாகவும், அலகுகளை மறக்காமலும் குறிக்க வேண்டும். படங்களை தெளிவாக வரையவும். புத்தகத்தில் தன்னாய்வு வினாக்களை தவறாமல் படித்தால் 12 ஒரு மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும்.

ஆர்.ஞானாம்பாள், காரைக் குடி மு.வி., அரசு மேல்நிலைப்பள்ளி (தாவரவியல்):
புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை நன்கு படிக்கவும். மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு எடுத் துகாட்டுடன் எழுத வேண்டும். வகைப்பட்டியல், செயலியல் பிரிவுகளில் அதிக வினாக்கள் கேட்பதால், அவற்றை நன்கு படிக்கவும். படங்களை தெளிவாக வரைந்து, பாகம் குறிக்கவும்.

பி.சந்தானம், மு.வி.,அரசு மேல்நிலைப்பள்ளி (விலங்கியல்):
அனைத்து பாடங்களையும் படித்தால் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதில் எழுதலாம். 2, 5, 6, 8 பாடங்களில் அதிக வினாக்கள் கேட்கப்படும். அவற்றை நன்கு படிக்கவும். ஐந்து, பத்து மதிப்பெண் வினாக்களுக்கு படம், பாகம் குறித்து தெளிவாக எழுத வேண்டும். தலைப்பு போட்டு பதில் எழுத வேண்டும்.

ஆர்.சுவாமிநாதன், புதுவயல்,  ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக்., பள்ளி (கணிதம்):
புத்தகத்தை முழுமையாக படித்தால் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதில் எழுதலாம். சூத்திரங்களை எழுதி, படிக்கவும். கணக்குகளை அடிக்கடி எழுதி பார்க்கவும். எடுத்துக்காட்டு கணக்குகளுக்கு விடை அளித்து பழக வேண்டும். பொது தேர்வு வினா புத்தகங்களை வாங்கி, விடை எழுதி பழகலாம்.  தினமும் ஒரு மணி நேரம் கணிதம் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.

இணைந்து வழங்கியோர்:
நிகழ்ச்சியை காரைக்குடி மாதா எலக்ட்ரிக்கல்ஸ், இதயம் பைப்ஸ், ஜே.கே.ரியல் எஸ் டேட்,  அழகப்பா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, தங்கமயில் ஜூவல்லர்ஸ், அப்துல்லா மிஷன் மருத்துவமனை, திருப்புத்தூர் விவேகானந்தா பாலிடெக்னிக் காலேஜ் இணைந்து வழங்கினர்.

பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக்., பள்ளி மாணவர் கே.வசந்த் காலை ஆறு மணிக்கும், எஸ்.எம். எஸ்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.பன்னீர் செல்வம் 6.30 மணிக்கும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்தனர். காரைக்குடியை சேர்ந்த  சசி பார்த்தசாரதி தனது மகளுடன் காலை ஆறு மணிக்கே வந்து விட்டார். ஆசிரியர்கள் அளித்த ஆலோசனை முழுவதையும் குறிப்பெடுத்த அவர் கூறுகையில், படிக்கும் போது டீ போட்டு கொடுப்பது போன்ற பணிகளை மட்டும் பெற்றோர் செய்தால் போதாது.  மகளுக்காக நான் டிவி பார்ப்பது இல்லை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us