திருமங்கலத்தில் கொட்டும் மழையிலும் குவிந்த மாணவர்கள்
திருமங்கலத்தில் கொட்டும் மழையிலும் குவிந்த மாணவர்கள்
UPDATED : நவ 15, 2009 12:00 AM
ADDED : நவ 15, 2009 09:17 AM
காலை 10ம் வகுப்பு, மதியம் பிளஸ் 2 வகுப்பினருக்கும் பொது தேர்வில் நூறு சதவீதம் மதிப்பெண் பெறும் வழிமுறைகளை வல்லுனர்கள் விளக்கினர். மாணவர்களுடன், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் குறிப்பெடுத்தனர்.
பத்தாம் வகுப்பு
ஆங்கிலம் - ஏ.லட்சுமி(காந்திநிகேதன் கோ.வே. மேல் நிலை பள்ளி ஆசிரியை, டி.கல்லுப் பட்டி):
ஆங்கிலத்தை வேற்று மொழியாக கருத கூடாது. அதை விரும்பி படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். கட்டுரைகள், பாடல்களை எழுதி பார்த்தால் தவறுகள் வராது. தேர்வில் பதிலளிக்கும் போது அழகாக அடித்தல் திருத்தல் இன்றி எழுத வேண்டும்.
கணிதம்
- ஏ.மோகன்( அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர், கோபிநாயக்கன்பட்டி):
கணிதத்தில் நூறு சதவீதம் மதிப்பெண் பெறுவது எளிது. தேர்வு எழுதியவுடன் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என கணித்து விடலாம். வரைபடம், செயற்முறை வடிவியல் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு முழுமையாக பதிலளித்தால் நூறு சதவீத மதிப்பெண் பெறலாம்.
அறிவியல் - ஜி.மருதமுத்து (மதுரை கல்லூரி மேல்நிலை பள்ளி ஆசிரியர்):
ஒரு மதிப்பெண்ணை பொறுத்து பாடத்தின் பிற்பகுதியிலுள்ள கேள்விகள் மற்றும் கடந்த 16 அரசு பொது தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை படிக்க வேண்டும். ஐந்து மதிப்பெண் கேள்விகளில் குறைந்தது ஐந்துக்கு பதிலளிக்க வேண்டும். வேதியியலில் 9, 8, 6 பாடங்களின் பிற்பகுதி கேள்விகளை படித்தால் 15 மதிப்பெண் பெறலாம். உயிரியலில் கடைசி இரண்டு பாடங்களில் 19 கேள்விகளை படித்தால் தேர்ச்சி பெறலாம்.
சமூக அறிவியல் - எஸ்.ஜேம்ஸ் லூர்துராஜ்(செயின்ட் மேரீஸ் மேல்நிலை பள்ளி ஆசிரியர்):
சமூக அறிவியலை படித்தால் பிற் காலத்தில் ஐ.ஏ.எஸ்., போன்ற பொது தேர்வுகளை எழுத உதவும். கதை படிப்பது போல வரலாறு பாடங்களை படித்தால் நினைவில் நிற்கும். ஆண்டுகளை வகைப்படுத்தி எந்த ஆண்டில் என்ன நிகழ்ந்தது? என நினைவில் கொள்ள வேண்டும். வரைபடத்தை எழுதி பார்க்க வேண்டும்.
பிளஸ் 2
ஆங்கிலம்: ஆர்.பழனிவேல்ராஜன் (சி.இ.ஒ.ஏ., மெட்ரிக். மேல் நிலை பள்ளி):
ஆங்கிலத்தில் தோல்வியடைய வாய்ப்பில்லை. இலக்கணத்தை முழுமையாக படிக்க வேண்டும். புத்தகத்தின் பின்புற கேள்விகள், ஏற்கனவே நடந்த அரசு பொது தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை படித்தால் ஐம்பது சதவீத மதிப்பெண் பெறலாம்.
கணிதம்: ஆர்.சந்திரசேகரன்(டி நோபிலி மெட்ரிக் மேல் நிலை பள்ளி):
காலை நேரத்தில் கணிதம் பயின்றால் புரியும். பார்முலாக்களை மனப்பாடம் செய்ய வேண்டும். பத்து மதிப்பெண் கேள்விகள் 2, 4, 7, 8 பாடங்களிலிருந்து கேட்கப்படலாம். மேலும் 1, 2, 3, 6, 7, 8, 9 பாடங்களிலிருந்து 194 மதிப்பெண் பெறுவதற்கான கேள்விகள் வர வாய்ப்புண்டு.
இயற்பியல்: வி.சுப்ரமணியன்(தியாகராஜர் மில்ஸ் மேல்நிலை பள்ளி, கப்பலூர்):
எல்லா பாடங்களிலும் மூன்று முக்கிய பத்து மதிப் பெண் கேள்விகளை படித்தால் 40 மதிப்பெண்ணும், புத்தகத்தின் பின்புறமுள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளை படித்தால் 18 மதிப்பெண்ணும் பெறலாம்.எலக்ட்ரானிக் பிரிவை முழுமையாக படித்தால் நூறு சதவீதம் மதிப்பெண் பெற முடியும்.
வேதியியல்: இ.சீனிவாசன்(அரசு மேல்நிலை பள்ளி, சமயநல்லூர்):
மின்வேதியியல், கரிம, கனிம வேதியியல், இயற்பியல் வேதியியல் கேள்விகளுக்கான விடைகளை எழுதி பார்க்க வேண்டும். சமன்பாடுகள், கணக்குகளைதேர்வு செய்து அடிக்கடி எழுதி பார்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.
உயிரியல்: டி.கணேசன்(சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலை பள்ளி):
விலங்கியலில் முதல் பாடம், தாவரவியலில் 5ம் பாடத்தை முழுமையாக படித்தால் தேர்ச்சி பெற்று விடலாம். மதிப்பெண் பெற விரும்புவோர் அதனுடன் விலங்கியலில் 2, 3 வது பாடங்கள், தாவரவியலில் 1, 2, 4வது பாடங்களை படிக்க வேண்டும்.
முதலில் வந்த மாணவர்களுக்கு தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் மாதிரி வினா, உடம்பும், மனசும் நல்லா இருக்கணும், புத்தகம், பேனா, பேடு இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை திருமங்கலம் பி.கே.என்.,
வித்யாசாலா சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கின.
