தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக தர வரிசையில் அண்ணா பல்கலைக்கு 76வது இடம்: துணைவேந்தர்!

உலக தர வரிசையில் அண்ணா பல்கலைக்கு 76வது இடம்: துணைவேந்தர்!

உலக தர வரிசையில் அண்ணா பல்கலைக்கு 76வது இடம்: துணைவேந்தர்!


UPDATED : நவ 15, 2009 12:00 AM

ADDED : நவ 15, 2009 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2009 12:00 AM ADDED : நவ 15, 2009 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ஏ.சி., டெக் இன்ஜினியரிங் கல்லூரியில், 1979ம் ஆண்டிலிருந்து 1984ம் ஆண்டு வரை படித்த, முதல் பிரிவு மாணவ, மாணவியரின் வெள்ளி விழா சந்திப்பு நடந்தது.

துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது: ஒரே வயதுள்ள மாணவர்கள், எந்த வயதில் சந்தித்தாலும் அவர்களது உணர்வுகள் பழைய நிலைக்கு வந்து விடும். அவர்கள் சந்திக்கும் போது, மாணவப் பருவத்தில் உள்ள அனுபவங்களை மீண்டும் நினைத்து பார்ப்பர். சிறந்த பேராசிரியரான, கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லதாவிடம் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால் அவர் பணி புரிந்த கல்லூரியில், பணி புரிய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. தனது உடல் நலம் குறைந்த 87வது வயதிலும் அவர் மாணவர்களை சந்திக்க வந்திருக்கிறார். அவரை பாராட்டினால், நமக்கு பெருமை கிடைக்கிறது.

கல்வித் தரம் மற்றும் ஆராய்ச்சியிலும், உலக அளவில்  உள்ள 200 சிறந்த பல்கலைக் கழகங்களில், அண்ணா பல்கலைக் கழகம் 76வது இடத்திலும், இந்திய அளவில் நான்கு ஐ.ஐ.டி.,களைத் தொடர்ந்து, ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இவ்வாறு மன்னர் ஜவகர் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி, ஏ.சி., டெக் கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லதா, கல்லூரியின் முதல்வர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us