வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து விவாதம் தேவை
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து விவாதம் தேவை
UPDATED : நவ 15, 2009 12:00 AM
ADDED : நவ 15, 2009 05:20 PM
சென்னையில் நடைபெற்ற நானி பல்கிவாலா நினைவு விரிவுரை நிகழ்த்திய விஸ்வநாதன், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது குறித்து தனியார் பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்றார். இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் நாட்டில் கல்விக்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கத்தாரிலும் லெபனானிலும் இயங்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், அந்த நாடுகளில் இயங்கும் பல்கலைக்கழகங்களை விட 20 மடங்கு அதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்தியாவில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வருவதை எதிர்க்கவில்லை. அதேசமயம், அந்தக் கல்வி நிறுவனங்கள் வருவதால் என்ன நிலைமை ஏற்படும் எந்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
தற்போது நமது நாட்டில் தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கல்வி அறக்கட்டளைகளின் மூலம்தான் செயல்பட முடியும். லாப நோக்கில் செயல் முடியாது என்றும் அவரது உரையில் தெரிவித்தார்.
