சமச்சீர் கல்வி மூலம் ஏற்றதாழ்வை அகற்றலாம்: தங்கம் தென்னரசு
சமச்சீர் கல்வி மூலம் ஏற்றதாழ்வை அகற்றலாம்: தங்கம் தென்னரசு
UPDATED : நவ 15, 2009 12:00 AM
ADDED : நவ 15, 2009 05:21 PM
சென்னையில் அரசு ஏற்பாடு செய்திருந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தின் மூலம் கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அகற்ற முடியும் என்றார். மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கல்வி முறையில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைககும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை நூறு சதவீதம் அளவுக்கு மாணவர்களும் பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். இலவச புத்தகங்கள், மதிய உணவு, இலவச சைக்கிள் போன்ற திட்டங்கள் பள்ளிக்கு மாணவர்கள் வருகையை அதிகரித்துள்ளது என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நாட்டில் ஜனநாயகத்திற்கான விதைகளை விதைத்தவர் நேரு. நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு அவர் காரணமாகத் திகழந்தார். அதன் மூலம்தான் நமது நாடு உயர்கல்வியில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்று பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் குற்றாலிங்கம் தெரிவித்தார்.
